வியாழன், 5 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 தேவன் உண்மையுள்ளவர்; அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. தேவன் மீதும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு இன்றியமையாததாகும். விசுவாசம் இல்லாமல், யாராலும் கர்த்தருக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்கிறது பரிசுத்த வேதாகமம். கிறிஸ்தவ வாழ்வில், சூழ்நிலைகள் சில சமயங்களில் தேவனின் வாக்குத்தத்தங்களுக்கும் நம் விசுவாசத்துக்கும் முரணாகத் தோன்றலாம். அவரே சிருஷ்டிகர். அவருடைய வழிகள் நம்முடைய வழிகளைப் பார்க்கிலும் மிக உயர்ந்தவைகளும் புரிந்துகொள்வதற்குக் கடினமானவையாகவும் இருக்கின்றன. சாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ என்ற மூன்று இஸ்ரவேலரின் கதை, அசைக்க முடியாத நம்பிக்கை இன்னதென்பதைப் பற்றி பேசுகிறது. அக்கினியில் எறியப்படும் நேரத்திலும், அவர்கள் தைரியமாயும், மரணத்திற்கு அஞ்சாதவர்களாயும் இருந்தனர். தேவன் அவர்களை அக்கினியிலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்கத் தவறினாலும் தாங்கள் தேவனில் நம்பிக்கை வைப்போம் என்று அவர்கள் வெளிப்படையாய் அறிக்கை செய்தனர். தேவன் அவர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கனம்பண்ணினார். மேலும் கர்த்தருடைய தூதன் எப்படிச் சூளைக்குள் தோன்றி அவர்களைப் பாதுகாப்பாய் வைத்திருந்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அசையாத விசுவாசமுள்ள இருதயத்தினால் என்னை உம்மில் பலப்படுத்தும். ஆமென்.
நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல்...
“; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 தேவன் உண்மையுள்ளவர்; அவருடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை. தேவன் மீதும் அவருடைய வாக்குத்தத்தங்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பது கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்கு இன்றியமையாததாகும். விசுவாசம் இல்லாமல், யாராலும் கர்த்தருக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம் என்கிறது பரிசுத்த வேதாகமம். கிறிஸ்தவ வாழ்வில், சூழ்நிலைகள் சில சமயங்களில் தேவனின் வாக்குத்தத்தங்களுக்கும் நம் விசுவாசத்துக்கும் முரணாகத் தோன்றலாம். அவரே சிருஷ்டிகர். அவருடைய வழிகள் நம்முடைய வழிகளைப் பார்க்கிலும் மிக உயர்ந்தவைகளும் புரிந்துகொள்வதற்குக் கடினமானவையாகவும் இருக்கின்றன. சாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ என்ற மூன்று இஸ்ரவேலரின் கதை, அசைக்க முடியாத நம்பிக்கை இன்னதென்பதைப் பற்றி பேசுகிறது. அக்கினியில் எறியப்படும் நேரத்திலும், அவர்கள் தைரியமாயும், மரணத்திற்கு அஞ்சாதவர்களாயும் இருந்தனர். தேவன் அவர்களை அக்கினியிலிருந்தும், மரணத்திலிருந்தும் மீட்கத் தவறினாலும் தாங்கள் தேவனில் நம்பிக்கை வைப்போம் என்று அவர்கள் வெளிப்படையாய் அறிக்கை செய்தனர். தேவன் அவர்களின் அசைக்க முடியாத விசுவாசத்தைக் கனம்பண்ணினார். மேலும் கர்த்தருடைய தூதன் எப்படிச் சூளைக்குள் தோன்றி அவர்களைப் பாதுகாப்பாய் வைத்திருந்தார் என்பதையும் நாம் வாசிக்கிறோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, அசையாத விசுவாசமுள்ள இருதயத்தினால் என்னை உம்மில் பலப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

