← செய்திகளுக்குத் திரும்பு
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்
படத்தைப் பதிவிறக்கு

நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்

“சங்கீதம் 4:5 நாம் காணிக்கைகளையும் பலிகளையும் கொண்டு வரும்போது, ​​மக்கள் வழக்கமாய், அதன்அளவையும், மதிப்பையும் பார்க்கிறார்கள். ஆனால், தேவன் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நம் மனப்பான்மையையும் இருதயத்தின் நோக்கத்தையும் பார்க்கிறார். பலிகள் தேவனால் அங்கிகரிக்கப்படாவிட்டால், அதன் மதிப்பு அர்த்தமற்றதாகிவிடும். தோற்றத்திற்காகவோ, உங்கள் நிலையை நிரூபிக்கவோ, அவற்றை காட்சிப் பொருளாக்குவதற்காகவோ, தேவனிடம் பேரம் பேசுவதற்காகவோ பலி செலுத்தாதீர்கள். மாறாக, தேவன் மீதுள்ள உண்மையான அன்பினால் காணிக்கைகளையும், தியாக பலிகளையும் செலுத்துங்கள். அவரது இரக்கங்களுக்கும் அன்புக்குமான உங்கள் நன்றியுணர்வை, ஸ்தோத்திர பலிகளினால் காண்பியுங்கள். அவற்றை உண்மையாய்ச் செலுத்தி அவருடைய இரக்கத்தில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களைக் கவருவதற்காக அல்ல, சரியான மனப்பான்மையுடன் என் பலிகளைச் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள். சங்கீதம் 4:5 நாம் காணிக்கைகளையும் பலிகளையும் கொண்டு வரும்போது, ​​மக்கள் வழக்கமாய், அதன்அளவையும், மதிப்பையும் பார்க்கிறார்கள். ஆனால், தேவன் அதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நம் மனப்பான்மையையும் இருதயத்தின் நோக்கத்தையும் பார்க்கிறார். பலிகள் தேவனால் அங்கிகரிக்கப்படாவிட்டால், அதன் மதிப்பு அர்த்தமற்றதாகிவிடும். தோற்றத்திற்காகவோ, உங்கள் நிலையை நிரூபிக்கவோ, அவற்றை காட்சிப் பொருளாக்குவதற்காகவோ, தேவனிடம் பேரம் பேசுவதற்காகவோ பலி செலுத்தாதீர்கள். மாறாக, தேவன் மீதுள்ள உண்மையான அன்பினால் காணிக்கைகளையும், தியாக பலிகளையும் செலுத்துங்கள். அவரது இரக்கங்களுக்கும் அன்புக்குமான உங்கள் நன்றியுணர்வை, ஸ்தோத்திர பலிகளினால் காண்பியுங்கள். அவற்றை உண்மையாய்ச் செலுத்தி அவருடைய இரக்கத்தில் தொடர்ந்து நம்பிக்கை வையுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களைக் கவருவதற்காக அல்ல, சரியான மனப்பான்மையுடன் என் பலிகளைச் செலுத்த எனக்கு உதவி செய்யும். ஆமென்.