← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் கவலைகளைக் கர்த்தர் மேல் வையுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் கவலைகளைக் கர்த்தர் மேல் வையுங்கள், அவர் உங்களை ஆதரிப்பார்.

“திங்கட்கிழமை, 8 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22 * உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகம் நம்பியவர்கள் உங்கள் நம்பிக்கையை அவர்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறீர்களா? * யாராவது உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்களா?* அப்படியானால், ஆம், அது கடினமாகத்தான் இருக்கும். இருப்பினும், இது முடிவல்ல. * ஜன்ங்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று உணரும்போது, ​​நீங்கள் தேவனிடம் திரும்பலாம் என்பதை அறிவது ஆறுதல் அளிக்கிறது. தேவன் உங்களை நேசிக்கிறார். மேலும் மற்றவர்களை விட உங்கள்மேல் அக்கறையாயிருக்கிறார். * உங்கள் சுமைகள், பிரச்சினைகள், வலிகள், தொலைந்துபோன கனவுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், பொருளாதாரம் மற்றும் நம்பிக்கைகளைத் தேவனிடம் கொடுங்கள்.* நீங்கள் தேவனை நம்பும்போது, ​​அவர் உங்களைப் பாதுகாப்பார், உதவி செய்வார், ஆதரிப்பார்.* ஆம், அவர் உங்களை விசாரிக்கிறவராய் இருக்கிறார். நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: ஆண்டவரே, எனது கடினமான சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் நீர் என்னிடம் காண்பிக்கிற உமது அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22 * உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அதிகம் நம்பியவர்கள் உங்கள் நம்பிக்கையை அவர்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள் என்று நினைக்கிறீர்களா? * யாராவது உங்களுக்குத் துரோகம் செய்துவிட்டார்களா?* அப்படியானால், ஆம், அது கடினமாகத்தான் இருக்கும். இருப்பினும், இது முடிவல்ல. * ஜன்ங்கள் நம்பத்தகுந்தவர்கள் அல்ல என்று உணரும்போது, ​​நீங்கள் தேவனிடம் திரும்பலாம் என்பதை அறிவது ஆறுதல் அளிக்கிறது. தேவன் உங்களை நேசிக்கிறார். மேலும் மற்றவர்களை விட உங்கள்மேல் அக்கறையாயிருக்கிறார். * உங்கள் சுமைகள், பிரச்சினைகள், வலிகள், தொலைந்துபோன கனவுகள், ஏமாற்றங்கள், தோல்விகள், பொருளாதாரம் மற்றும் நம்பிக்கைகளைத் தேவனிடம் கொடுங்கள்.* நீங்கள் தேவனை நம்பும்போது, ​​அவர் உங்களைப் பாதுகாப்பார், உதவி செய்வார், ஆதரிப்பார்.* ஆம், அவர் உங்களை விசாரிக்கிறவராய் இருக்கிறார். நீங்கள் அசைக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: ஆண்டவரே, எனது கடினமான சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் நீர் என்னிடம் காண்பிக்கிற உமது அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.