வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9 மனிதகுலம் அனைத்திற்குமான தேவ அன்பு உறுதியானதும், மாறாததும், நிபந்தனையற்றதுமாகும். அவர், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று சித்தமுள்ளவராயிருக்கிறார். நம்மேல் பொறுமையையும், இரக்கத்தையும் காண்பித்து, ஒரு அன்புள்ள தகப்பனாய் அக்கறை காட்டுகிறார். எப்பொழுதும் நம் வாழ்வில் சிறந்ததைக் கொடுக்கவே விரும்புகிறார். எனவே, தேவனின் பொறுமையை அசட்டைபண்ணாதீர்கள்; அது எல்லையற்றதும் முடிவில்லாததுமாய் இருக்கிறது. நீங்கள் தேவ வழிகளை விட்டு விலகி இருந்தால், அவருடைய அன்பையும், பொறுமையையும் பயன்படுத்திக்கொண்டு இன்றைக்கே மனந்திரும்புங்கள். அவர் எப்போதும் திறந்த கரங்களுடன் உங்களுக்காகக் காத்திருக்கிறார். உங்களை மன்னித்து மீண்டும் தமது அரவணைப்பிற்குள் கொண்டுவர ஆயத்தமாயிருக்கிறார். தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழத் தேவையான சீர்ப்படுத்துதலை மேற்கொள்ளுங்கள். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி, அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, பிறரிடம் அன்பும் மனதுருக்கமும் கொண்டதொரு வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமக்குப் பிரியமானதும் நீர் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமானதோர் வாழ்க்கை வாழ எனக்கு உதவியருளும். உமது கட்டளைகளைப் பின்பற்றவும், உமது வழிகாட்டுதலைத் தேடவும், பிறரிடம் அன்பும் மனதுருக்கமும் கொண்டதொரு வாழ்க்கை வாழவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
நீங்கள் மனந்திரும்பவேண்டுமென்று அவர் உங்கள்மேல் நீடிய...
“வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9 மனிதகுலம் அனைத்திற்குமான தேவ அன்பு உறுதியானதும், மாறாததும், நிபந்தனையற்றதுமாகும். அவர், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று சித்தமுள்ளவராயிருக்கிறார். நம்மேல் பொறுமையையும், இரக்கத்தையும் காண்பித்து, ஒரு அன்புள்ள தகப்பனாய் அக்கறை காட்டுகிறார். எப்பொழுதும் நம் வாழ்வில் சிறந்ததைக் கொடுக்கவே விரும்புகிறார். எனவே, தேவனின் பொறுமையை அசட்டைபண்ணாதீர்கள்; அது எல்லையற்றதும் முடிவில்லாததுமாய் இருக்கிறது. நீங்கள் தேவ வழிகளை விட்டு விலகி இருந்தால், அவருடைய அன்பையும், பொறுமையையும் பயன்படுத்திக்கொண்டு இன்றைக்கே மனந்திரும்புங்கள். அவர் எப்போதும் திறந்த கரங்களுடன் உங்களுக்காகக் காத்திருக்கிறார். உங்களை மன்னித்து மீண்டும் தமது அரவணைப்பிற்குள் கொண்டுவர ஆயத்தமாயிருக்கிறார். தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழத் தேவையான சீர்ப்படுத்துதலை மேற்கொள்ளுங்கள். அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி, அவருடைய வழிகாட்டுதலைத் தேடி, பிறரிடம் அன்பும் மனதுருக்கமும் கொண்டதொரு வாழ்க்கை வாழுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமக்குப் பிரியமானதும் நீர் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமானதோர் வாழ்க்கை வாழ எனக்கு உதவியருளும். உமது கட்டளைகளைப் பின்பற்றவும், உமது வழிகாட்டுதலைத் தேடவும், பிறரிடம் அன்பும் மனதுருக்கமும் கொண்டதொரு வாழ்க்கை வாழவும் எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

