← செய்திகளுக்குத் திரும்பு
பிறர் உங்களுக்கு எதிராக தப்பிதங்களை செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்களையும் மன்னிப்பார்.
படத்தைப் பதிவிறக்கு

பிறர் உங்களுக்கு எதிராக தப்பிதங்களை செய்யும்போது நீங்கள்...

“புதன்கிழமை, 6 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6:14 சமாதானமாய் வாழ்வதன் ரகசியம் பிறரை மன்னிப்பதாகும். இன்றைய உலகம் சண்டை சச்சரவுகளால் நிறைந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை, கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை மன்னிக்க முடியாததால் உருவாகின்றன. ஒரு எதிர்ப்பை மன்னிக்கத் தவறுவதோ, அல்லது ஒரு விமர்சனத்தின் தவறான விளக்கமோ இன்னும் ஆழமான சர்ச்சையாய் அல்லது மோதலாய் மாறுகிறது. இந்தக் காலகட்டத்தில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நமது மன நலனை ஆழமாய்ப் பாதிக்கும். நமது உடல் நலத்தையும் நிச்சயமாய்ப் பாதிக்கும். # இருப்பினும், நம்முடைய மீறல்களை இயேசு எவ்வாறு மன்னித்தாரோ அவ்விதத்திலேயே எல்லா நபர்களுக்கும் மன்னிப்பை வழங்குமாறு நமக்கு அறிவுறுத்தினார்.# நீங்கள் உங்களைத் தேவனுடைய பிள்ளையாய் அடையாளம் கண்டு, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று உறுதியுள்ளோராய் இருந்தால், உங்கள் கடமைகளை நீங்கள் உணர்ந்து நிறைவேற்றுவது அவசியம்.# மன்னிப்பு மன அழுத்தத்தைப் போக்கி நமக்குச் சமாதானத்தை வழங்கும்.# இயேசுவின் பரிகாரத்தின் மூலம் நீங்கள் மன்னிப்பைப் பெற்றதைப் போல, உங்களுக்கு எதிராகக் குற்றஞ்ச் செய்தவர்களை நீங்கள் தொடர்ந்து மன்னிப்பது அவசியம்.# உங்கள் இறுதி மூச்சு வரை பிறரை மன்னிக்க வேண்டும். # மற்றவர்களை மன்னிப்பீர்களா?# (அல்லது) உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ அநீதியிழைத்த மனிதர்களை நீங்கள் வெறுப்பீர்களா?# மன்னிப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துவோமாக.# மற்றவர்களை மன்னிப்பது நம்மை வெளி உலகத்திற்கு அபத்தமாகத் தோன்றச் செய்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி நம் வாழ்நாள் முழுவதும் அது நமக்கு நன்மை பயக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை மன்னித்து, அவர்களுக்கு உமது அன்பையும் இரக்கத்தையும் காட்ட எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6:14 சமாதானமாய் வாழ்வதன் ரகசியம் பிறரை மன்னிப்பதாகும். இன்றைய உலகம் சண்டை சச்சரவுகளால் நிறைந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை, கடந்தகாலத்தில் நிகழ்ந்தவற்றை மன்னிக்க முடியாததால் உருவாகின்றன. ஒரு எதிர்ப்பை மன்னிக்கத் தவறுவதோ, அல்லது ஒரு விமர்சனத்தின் தவறான விளக்கமோ இன்னும் ஆழமான சர்ச்சையாய் அல்லது மோதலாய் மாறுகிறது. இந்தக் காலகட்டத்தில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நமது மன நலனை ஆழமாய்ப் பாதிக்கும். நமது உடல் நலத்தையும் நிச்சயமாய்ப் பாதிக்கும். # இருப்பினும், நம்முடைய மீறல்களை இயேசு எவ்வாறு மன்னித்தாரோ அவ்விதத்திலேயே எல்லா நபர்களுக்கும் மன்னிப்பை வழங்குமாறு நமக்கு அறிவுறுத்தினார்.# நீங்கள் உங்களைத் தேவனுடைய பிள்ளையாய் அடையாளம் கண்டு, உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று உறுதியுள்ளோராய் இருந்தால், உங்கள் கடமைகளை நீங்கள் உணர்ந்து நிறைவேற்றுவது அவசியம்.# மன்னிப்பு மன அழுத்தத்தைப் போக்கி நமக்குச் சமாதானத்தை வழங்கும்.# இயேசுவின் பரிகாரத்தின் மூலம் நீங்கள் மன்னிப்பைப் பெற்றதைப் போல, உங்களுக்கு எதிராகக் குற்றஞ்ச் செய்தவர்களை நீங்கள் தொடர்ந்து மன்னிப்பது அவசியம்.# உங்கள் இறுதி மூச்சு வரை பிறரை மன்னிக்க வேண்டும். # மற்றவர்களை மன்னிப்பீர்களா?# (அல்லது) உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ அநீதியிழைத்த மனிதர்களை நீங்கள் வெறுப்பீர்களா?# மன்னிப்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துவோமாக.# மற்றவர்களை மன்னிப்பது நம்மை வெளி உலகத்திற்கு அபத்தமாகத் தோன்றச் செய்தாலும், சந்தேகத்திற்கு இடமின்றி நம் வாழ்நாள் முழுவதும் அது நமக்கு நன்மை பயக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை மன்னித்து, அவர்களுக்கு உமது அன்பையும் இரக்கத்தையும் காட்ட எனக்கு உதவும். ஆமென்.