வியாழன், 11 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18 பரிசுத்த வேதாகமம் என்பது எழுதப்பட்ட தேவவார்த்தை. இது, புகழ் பெற்றதும், அறிவு மற்றும் ஞானத்தின் ஐசுவரியத்தினால் நிறையப்பட்டதுமாய்க் காணப்படுகிறது. மேலும், இது மனிதகுலம் மற்றும் உலகத்திற்கான தேவதிட்டத்தை வெளிப்படுத்துகிறது. என்றாலும், நமது மனக் கண்களைத் திறந்து, இந்தப் பொக்கிஷங்களைக் கண்டடைய, தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பொறுமையின்றி வேதத்தை வாசிப்பது எந்தவொரு வெளிச்சத்தையும் கொடுக்காது. மாறாக, நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமுரிய திறவுகோலை வைத்திருக்கும் பரிசுத்த நூலாக அதை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மரியாதையுடனும் பயபக்தியுடனும் நாம் அதனை படிக்க வேண்டும். வேதத்தின் மறைவான உண்மைகளைப் புரிந்துகொள்ள, அவற்றை வெளிப்படுத்தும்படி இயேசுவிடம் தாழ்மையுடன் கேட்க வேண்டும். அவருடைய வார்த்தையில் மறைந்திருக்கும் அற்புதமான இரகசியங்களைப் புரிந்துகொள்ள அவர் ஒருவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். வேதத்தில் மறைந்திருக்கும் உங்கள் வாழ்க்கையைப் பற்றின சத்தியங்களை வெளிப்படுத்தப் பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அவரது உபதேசங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதராய் மாற உங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்துங்கள். அதன்மூலம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு பிறருக்கும் ஆசீர்வாதமாக மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையிலிருந்து உமது சத்தியங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும். உமது வழிகளை எனக்குக் கற்றுத் தந்து, அவற்றை என் வாழ்வில் அனுதினமும் பின்பற்ற எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.
கர்த்தருடைய வேதத்திலுள்ள அதிசயமான சத்தியங்களைத் தேடிப் பாருங்கள்.
“வியாழன், 11 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். சங்கீதம் 119:18 பரிசுத்த வேதாகமம் என்பது எழுதப்பட்ட தேவவார்த்தை. இது, புகழ் பெற்றதும், அறிவு மற்றும் ஞானத்தின் ஐசுவரியத்தினால் நிறையப்பட்டதுமாய்க் காணப்படுகிறது. மேலும், இது மனிதகுலம் மற்றும் உலகத்திற்கான தேவதிட்டத்தை வெளிப்படுத்துகிறது. என்றாலும், நமது மனக் கண்களைத் திறந்து, இந்தப் பொக்கிஷங்களைக் கண்டடைய, தேவனுடைய உதவி தேவைப்படுகிறது. பொறுமையின்றி வேதத்தை வாசிப்பது எந்தவொரு வெளிச்சத்தையும் கொடுக்காது. மாறாக, நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமுரிய திறவுகோலை வைத்திருக்கும் பரிசுத்த நூலாக அதை ஏற்றுக்கொண்டு, மிகுந்த மரியாதையுடனும் பயபக்தியுடனும் நாம் அதனை படிக்க வேண்டும். வேதத்தின் மறைவான உண்மைகளைப் புரிந்துகொள்ள, அவற்றை வெளிப்படுத்தும்படி இயேசுவிடம் தாழ்மையுடன் கேட்க வேண்டும். அவருடைய வார்த்தையில் மறைந்திருக்கும் அற்புதமான இரகசியங்களைப் புரிந்துகொள்ள அவர் ஒருவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். வேதத்தில் மறைந்திருக்கும் உங்கள் வாழ்க்கையைப் பற்றின சத்தியங்களை வெளிப்படுத்தப் பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். அவரது உபதேசங்களைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதராய் மாற உங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்துங்கள். அதன்மூலம், நீங்கள் தனிப்பட்ட முறையில் தேவனுடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதோடு பிறருக்கும் ஆசீர்வாதமாக மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையிலிருந்து உமது சத்தியங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியருளும். உமது வழிகளை எனக்குக் கற்றுத் தந்து, அவற்றை என் வாழ்வில் அனுதினமும் பின்பற்ற எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

