← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய வார்த்தையில் நீங்கள் நம்பிக்கையைக் கண்டடையலாம்.
படத்தைப் பதிவிறக்கு

தேவனுடைய வார்த்தையில் நீங்கள் நம்பிக்கையைக் கண்டடையலாம்.

“சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். சங்கீதம் 119:49 சங்கீதக்காரன் தேவனுடன் கொண்டிருந்த வலுவான தொடர்பை இந்தப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. அவருக்கு நம்பிக்கையைக் கொண்டுவருவதற்குத் தேவன் ஒரு தனித்துவமான செய்தியைக் கொடுத்தார். இயேசுவுடனான உங்கள் உறவு இன்று எவ்வளவு நெருக்கமாயிருக்கிறது? நீங்கள் தயங்காமல் உங்கள் வாழ்வின் இன்னல்களை அவரிடம் வெளிப்படையாய்ப் பகிர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு எதையும் மறைக்காமல் இருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் அவருக்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் அவரைத் திறந்த இருதயத்தோடு நம்பும்போது, உங்களை வழிநடத்தி, உங்கள் தேவைகளுக்கேற்ற வாக்குத்தத்தங்களை தருகிறார். இந்த வாக்குத்தத்தங்கள் உங்களை ஊக்குவித்து, உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்க தேவையான பலத்தையும், வழிகளையும் கண்டடைய உதவிச் செய்யும். நம்பிக்கையளிக்கும் தனித்துவமான இவ்வாக்குத்தத்தங்களைப் பெறும் அளவுக்கு அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், தியானிக்கவும் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். நீங்கள் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மிலும், உமது வார்த்தையிலும் வலுவாகவும், ஆழமாகவும் வளர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். சங்கீதம் 119:49 சங்கீதக்காரன் தேவனுடன் கொண்டிருந்த வலுவான தொடர்பை இந்தப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. அவருக்கு நம்பிக்கையைக் கொண்டுவருவதற்குத் தேவன் ஒரு தனித்துவமான செய்தியைக் கொடுத்தார். இயேசுவுடனான உங்கள் உறவு இன்று எவ்வளவு நெருக்கமாயிருக்கிறது? நீங்கள் தயங்காமல் உங்கள் வாழ்வின் இன்னல்களை அவரிடம் வெளிப்படையாய்ப் பகிர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு எதையும் மறைக்காமல் இருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்கள் வாழ்க்கையில் அவருக்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் அவரைத் திறந்த இருதயத்தோடு நம்பும்போது, உங்களை வழிநடத்தி, உங்கள் தேவைகளுக்கேற்ற வாக்குத்தத்தங்களை தருகிறார். இந்த வாக்குத்தத்தங்கள் உங்களை ஊக்குவித்து, உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்க தேவையான பலத்தையும், வழிகளையும் கண்டடைய உதவிச் செய்யும். நம்பிக்கையளிக்கும் தனித்துவமான இவ்வாக்குத்தத்தங்களைப் பெறும் அளவுக்கு அவருடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தையைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும், தியானிக்கவும் அதிக நேரத்தைச் செலவிடுங்கள். அவற்றை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். நீங்கள் மெய்யாகவே ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மிலும், உமது வார்த்தையிலும் வலுவாகவும், ஆழமாகவும் வளர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.