வியாழன், 29 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6:14 இயேசுவின் மிகவும் வல்லமையான போதனைகளில் ஒன்று மன்னிப்புப் பற்றியது. நமக்கெதிராகப் பாவம் செய்வோரை நாம் மன்னித்தால், பரம பிதா நம்மை மன்னிப்பார் என்று அவர் போதித்தார். இந்த உபதேசம் நம் ஆவிக்குரிய வாழ்வில் மன்னிப்பின் மாண்பை வலியுறுத்துகிறது. * உங்களுக்கு யாரிடமாவது வெறுப்பிருக்கிறதா?* பிறர் செய்த தவறையும் தீங்கையும் மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா?* இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்காமல் உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.* மேலும், நீங்கள் பிறரை மன்னிக்காவிட்டால் தேவன் உங்களை மன்னிக்கமாட்டார். மன்னிப்பு என்பதைப் புரிந்துகொள்வது பெரும்பாலும் சவாலானது. மன்னிப்பு இல்லாமல் பரலோகத்தில் நுழைய முடியாது. மன்னிப்பது கடினமாய் இருக்கலாம். ஆனால் நீங்கள் தேவ உதவியை நாடும்போது உங்கள் சத்துருக்களையும் மன்னிக்கும் கிருபையை அவர் உங்களுக்கு தருவார். நீங்கள் மற்றவர்களை எவ்வளவு அதிகமாய் மன்னிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் உங்கள் சொந்த மீறுதல்களுக்காக நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். மன்னிக்கும் செயல் நம்மை கசப்பு, வெறுப்பு போன்ற சுமையிலிருந்து விடுவிக்கிறது. இது, எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிட்டு நம் வாழ்க்கையில் முன்னேற உதவிச் செய்கிறது. மேலும், மற்றவர்களை மன்னிப்பது தேவன் நமக்குக் காட்டிய அன்பு மற்றும் இரக்கத்தின் பிரதிபலிப்பாயிருக்கிறது. நாம் மன்னிக்கும்போது, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருடைய அன்பை உலகுக்கு வெளிப்படுத்துகிறோம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னைக் காயப்படுத்தியோரை மன்னிக்கும் கிருபையை எனக்குத் தந்தருளும் . ஆமென்.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள்...
“மத்தேயு 6:14 இயேசுவின் மிகவும் வல்லமையான போதனைகளில் ஒன்று மன்னிப்புப் பற்றியது. நமக்கெதிராகப் பாவம் செய்வோரை நாம் மன்னித்தால், பரம பிதா நம்மை மன்னிப்பார் என்று அவர் போதித்தார். இந்த உபதேசம் நம் ஆவிக்குரிய வாழ்வில் மன்னிப்பின் மாண்பை வலியுறுத்துகிறது. * உங்களுக்கு யாரிடமாவது வெறுப்பிருக்கிறதா?* பிறர் செய்த தவறையும் தீங்கையும் மறக்க முடியாமல் தவிக்கிறீர்களா?* இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்காமல் உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.* மேலும், நீங்கள் பிறரை மன்னிக்காவிட்டால் தேவன் உங்களை மன்னிக்கமாட்டார். மன்னிப்பு என்பதைப் புரிந்துகொள்வது பெரும்பாலும் சவாலானது. மன்னிப்பு இல்லாமல் பரலோகத்தில் நுழைய முடியாது. மன்னிப்பது கடினமாய் இருக்கலாம். ஆனால் நீங்கள் தேவ உதவியை நாடும்போது உங்கள் சத்துருக்களையும் மன்னிக்கும் கிருபையை அவர் உங்களுக்கு தருவார். நீங்கள் மற்றவர்களை எவ்வளவு அதிகமாய் மன்னிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் உங்கள் சொந்த மீறுதல்களுக்காக நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். மன்னிக்கும் செயல் நம்மை கசப்பு, வெறுப்பு போன்ற சுமையிலிருந்து விடுவிக்கிறது. இது, எதிர்மறை சிந்தனைகளை விட்டுவிட்டு நம் வாழ்க்கையில் முன்னேற உதவிச் செய்கிறது. மேலும், மற்றவர்களை மன்னிப்பது தேவன் நமக்குக் காட்டிய அன்பு மற்றும் இரக்கத்தின் பிரதிபலிப்பாயிருக்கிறது. நாம் மன்னிக்கும்போது, இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அவருடைய அன்பை உலகுக்கு வெளிப்படுத்துகிறோம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்னைக் காயப்படுத்தியோரை மன்னிக்கும் கிருபையை எனக்குத் தந்தருளும் . ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

