செவ்வாய், 15 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள். ஓசியா 14:7 - இவ்வசனமானது, விரிவாக்கம், வளர்ச்சி அல்லது வெற்றியைக் குறிக்கிறது.- உங்கள் தற்போதைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்திலும் தேவன் காரியங்களை மாற்ற முடியும். - தானியங்களின் செழிப்புக்குப் பின்னால் பயிரிடுகிறவனின் உழைப்பு இருக்கிறது.- இதேபோல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பணியாற்றுங்கள்.- தகுந்த நேரத்தில் தேவன் உங்களுக்கு வெகுமதியளித்து ஆசீர்வதிப்பார்.- நீங்கள் கிறிஸ்துவின் பாதுகாப்பில் இருந்தால், அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாயிருக்கும் என்று அவர் உறுதியளிக்கிறார். - எனவே, தேவனுடைய வழிகளைப் பின்பற்றுங்கள்; நீங்கள் தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைத் தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படரச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் தானிய விளைச்சலைப்போலச் செழித்து,...
“ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னைத் தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படரச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

