திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும். 2 சாமுவேல் 15:20 (TAERV) சூழ்நிலைகள் தண்டனைக்கு சாதகமாய் இருந்தாலும், பரிவு மற்றும் கருணை காட்டுவதே இரக்கமாகும்- நம் தேவன் இரக்கமுள்ளவர், அவருடைய இரக்கம் நித்தியமானது.- அவருடைய இரக்கத்தினிமித்தம், நாம் தண்டனையிலிருந்து விடுபட்டு, பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றுக் கொள்கிறோம்.- இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.- தேவனுடைய இரக்கத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. - தேவன் உண்மையுள்ளவராய் இருப்பதால், அவர் பொய் உதடுகளை வெறுக்கிறார்.- பரிசுத்த வேதாகமம், “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”,என்று கூறுகிறது- தேவ பிள்ளையாகிய நீங்கள் , உங்கள் வணிகம், வேலை மற்றும் எல்லா இடங்களிலும் உண்மையுள்ளவராய் இருக்கிறீர்களா? - நேர்மையாயிருப்பதற்கும், மனுக்குலத்திற்கான தேவ இரக்கத்தின் உயிருள்ள உதாரணமாய் விளங்குவதற்கும், கிருபைக்காய்த் தேவனிடம் கேளுங்கள்.- உண்மையும் இரக்கமும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்மேல் இரக்கமாயிரும். என் வாழ்நாள் முழுவதும் உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
இரக்கமும் உண்மையும் உங்களுடன் இருப்பதாக
“திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும். 2 சாமுவேல் 15:20 (TAERV) சூழ்நிலைகள் தண்டனைக்கு சாதகமாய் இருந்தாலும், பரிவு மற்றும் கருணை காட்டுவதே இரக்கமாகும்- நம் தேவன் இரக்கமுள்ளவர், அவருடைய இரக்கம் நித்தியமானது.- அவருடைய இரக்கத்தினிமித்தம், நாம் தண்டனையிலிருந்து விடுபட்டு, பாவத்திற்கு மன்னிப்பைப் பெற்றுக் கொள்கிறோம்.- இது நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.- தேவனுடைய இரக்கத்தை சாதாரணமாய் எடுத்துக்கொள்ளக் கூடாது. - தேவன் உண்மையுள்ளவராய் இருப்பதால், அவர் பொய் உதடுகளை வெறுக்கிறார்.- பரிசுத்த வேதாகமம், "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்",என்று கூறுகிறது- தேவ பிள்ளையாகிய நீங்கள் , உங்கள் வணிகம், வேலை மற்றும் எல்லா இடங்களிலும் உண்மையுள்ளவராய் இருக்கிறீர்களா? - நேர்மையாயிருப்பதற்கும், மனுக்குலத்திற்கான தேவ இரக்கத்தின் உயிருள்ள உதாரணமாய் விளங்குவதற்கும், கிருபைக்காய்த் தேவனிடம் கேளுங்கள்.- உண்மையும் இரக்கமும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்மேல் இரக்கமாயிரும். என் வாழ்நாள் முழுவதும் உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

