← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கவனிக்கிறீர்களா?
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கவனிக்கிறீர்களா?

“புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன்.1 சாமுவேல் 3:9 இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான சாமுவேல் தமது வாழ்நாளில் பலமுறை தேவனோடு இடைப்பட்டதாய்ப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. சாமுவேல் தேவனின் குரலைக் கவனித்தார், இது இஸ்ரவேல் மக்களைச் சரியான நேரத்தில் தேவனிடமிருந்து சரியான வார்த்தையைப் பெற்று வழிநடத்த அவருக்கு உதவியது. அன்பு தேவ பிள்ளையே, தேவனோடு உங்கள் உறவு எப்படியிருக்கிறது? தேவன் சொல்வதைக் கேட்க நேரம் ஒதுக்குகிறீர்களா? அல்லது அவருடைய பதிலைக் கேட்கப் பொறுமையற்றிருக்கும் பெரும்பான்மையினரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்களா? உடனடி (இன்ஸ்டன்ட்) காபி தயாரிப்பது போல் தேவனிடம் அவசரப்பட வேண்டாம். அவருக்காகக் காத்திருக்க நேரம் ஒதுக்குங்கள், உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றிக் கவனத்துடன் கேளுங்கள். அவர் தமது பிள்ளைகளுடன் பேச விரும்புகிறார், உங்களிடமும் பேசுவார். ஆம், நீங்கள் கவனிக்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கவனச்சிதறல்கள் இல்லாமல் உம் குரலைக் கேட்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன்.1 சாமுவேல் 3:9 இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான சாமுவேல் தமது வாழ்நாளில் பலமுறை தேவனோடு இடைப்பட்டதாய்ப் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. சாமுவேல் தேவனின் குரலைக் கவனித்தார், இது இஸ்ரவேல் மக்களைச் சரியான நேரத்தில் தேவனிடமிருந்து சரியான வார்த்தையைப் பெற்று வழிநடத்த அவருக்கு உதவியது. அன்பு தேவ பிள்ளையே, தேவனோடு உங்கள் உறவு எப்படியிருக்கிறது? தேவன் சொல்வதைக் கேட்க நேரம் ஒதுக்குகிறீர்களா? அல்லது அவருடைய பதிலைக் கேட்கப் பொறுமையற்றிருக்கும் பெரும்பான்மையினரைப் போன்று நீங்களும் இருக்கிறீர்களா? உடனடி (இன்ஸ்டன்ட்) காபி தயாரிப்பது போல் தேவனிடம் அவசரப்பட வேண்டாம். அவருக்காகக் காத்திருக்க நேரம் ஒதுக்குங்கள், உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றிக் கவனத்துடன் கேளுங்கள். அவர் தமது பிள்ளைகளுடன் பேச விரும்புகிறார், உங்களிடமும் பேசுவார். ஆம், நீங்கள் கவனிக்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, கவனச்சிதறல்கள் இல்லாமல் உம் குரலைக் கேட்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.