← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் புது ஜீவன் என்றென்றைக்கும் நிலைநிற்கும்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் புது ஜீவன் என்றென்றைக்கும் நிலைநிற்கும்.

“வியாழன், 18 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 1 பேதுரு 1:23 மறுபடியும் பிறந்த குழந்தையாக, நீங்கள் கிறிஸ்துவில் புதுப்பிக்கப்பட்ட ஆவியையும், வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் உடைய புதுப்படைப்பாயிருக்கிறீர்கள். என்றாலும், புதிதாகப் பிறந்த குழந்தையைப்போலவே, இந்தப் புதிய வாழ்க்கையையும் போஷித்து கவனத்தோடு வளர்ப்பது அவசியமாயிருகிறது. மற்றவர்களிடமிருந்து தேவ வார்த்தையைத் தொடர்ந்து தேடுவது தீர்வாகாது. எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவில் நிறைவான வாழ்க்கை வாழ உங்களுக்குத் தேவையான அனைத்து ஞானமும், வழிகாட்டுதலும் இதில் அடங்கியுள்ளது. மேலும், ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசு உங்களுக்குள் வாசமாயிருக்கிறார்; எனவே, அவருடைய சத்தத்தை உங்களுக்குள் நீங்கள் கேட்க முடியும். குறிப்பாக, தேவனுடைய போதனைகளுக்கு முரணான காரியங்களை எப்பொழுதும் மதிக்கும் இந்த உலகில் அவருடைய வார்த்தையின்படி வாழ்வது எல்லா நேரங்களிலும் எளிதானதல்ல. ஆனால், நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் புதிய வாழ்க்கை கிறிஸ்துவில் என்றென்றும் நிலைத்திருக்கும். ஆகையால், தேவனுடைய வார்த்தையைப் படித்துப் புரிந்துகொண்டு, அதன்படி வாழ நேரம் ஒதுக்குங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் கெட்டுப்போகாமல் இருப்பது நிச்சயம். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, உமது வார்த்தையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 18 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 1 பேதுரு 1:23 மறுபடியும் பிறந்த குழந்தையாக, நீங்கள் கிறிஸ்துவில் புதுப்பிக்கப்பட்ட ஆவியையும், வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் உடைய புதுப்படைப்பாயிருக்கிறீர்கள். என்றாலும், புதிதாகப் பிறந்த குழந்தையைப்போலவே, இந்தப் புதிய வாழ்க்கையையும் போஷித்து கவனத்தோடு வளர்ப்பது அவசியமாயிருகிறது. மற்றவர்களிடமிருந்து தேவ வார்த்தையைத் தொடர்ந்து தேடுவது தீர்வாகாது. எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தை உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவில் நிறைவான வாழ்க்கை வாழ உங்களுக்குத் தேவையான அனைத்து ஞானமும், வழிகாட்டுதலும் இதில் அடங்கியுள்ளது. மேலும், ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசு உங்களுக்குள் வாசமாயிருக்கிறார்; எனவே, அவருடைய சத்தத்தை உங்களுக்குள் நீங்கள் கேட்க முடியும். குறிப்பாக, தேவனுடைய போதனைகளுக்கு முரணான காரியங்களை எப்பொழுதும் மதிக்கும் இந்த உலகில் அவருடைய வார்த்தையின்படி வாழ்வது எல்லா நேரங்களிலும் எளிதானதல்ல. ஆனால், நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், உங்கள் புதிய வாழ்க்கை கிறிஸ்துவில் என்றென்றும் நிலைத்திருக்கும். ஆகையால், தேவனுடைய வார்த்தையைப் படித்துப் புரிந்துகொண்டு, அதன்படி வாழ நேரம் ஒதுக்குங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் கெட்டுப்போகாமல் இருப்பது நிச்சயம். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, உமது வார்த்தையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ எனக்கு கிருபை தாரும். ஆமென்.