வெள்ளிக்கிழமை, 5 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12 ஒளி என்பது வாழ்க்கையின் இன்றியமையாத அம்சம். இது சுவாசத்திற்கு அவசியமான ஆக்ஸிஜனைப் போலவே முக்கியமானது. ஒளியின்றி உயிரினங்கள் வாழ்ந்திருக்க முடியாது. பெரும்பாலான உயிரினங்கள் தங்கள் ஆற்றலை ஒளியிலிருந்துப் பெறுகின்றன. மேலும் தினசரி செயல்பாடுகளின் சுழற்சிகான நமது உடம்பில் உள்ள இயற்கை கடிகாரத்தை (சர்க்காடியன் இசைவுகளை) ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதுபோலவே, நமது ஆவிக்குரிய வாழ்விலும், ஒளி இன்றியமையாதது. இருப்பினும், இந்த ஆவிக்குரிய ஒளி இயல் உலகிலிருந்து தோன்ற முடியாது. நமக்குத் தேவையான ஆவிக்குரிய ஒளி ஒரு மேலான வல்லமையிலிருந்து மட்டுமே வர முடியும். மேலும் நற்செய்தி என்னவென்றால், இயேசுவே அந்த ஒளி. அவர் நம் இருண்ட தருணங்களில் நம்மை வழிநடத்தக்கூடிய ஓர் ஒளியாய் இருக்கிறார். மேலும் வாழ்க்கையின் சவால்களில் கடந்து செல்லத் தேவையான தெளிவை நமக்கு தருகிறார். எனவே, நீங்கள் இயேசுவைப் பின்பற்றினால், எப்பொழுதும் வெளிச்சத்தில் நடப்பீர்கள், இருள் உங்களை ஒருபொழுதும் மேற்கொள்ளாது. மேலும் இயேசுவின் ஒளியைப் பிரதிபலித்து நட்சத்திரங்களைப் போல் பிரகாசிப்பீர்கள். நீங்கள் நோக்கமும், அர்த்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அன்பையும் இரக்கத்தையும் பரப்பி, நம்பிக்கை மற்றும் நேர்மையின் கலங்கரை விளக்காய் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வெளிச்சத்தில் நடக்கவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இயேசுவைப் பின்பற்றினால் நீங்கள் ஒருபோதும் இருளில்...
“் உங்களை ஒருபொழுதும் மேற்கொள்ளாது. மேலும் இயேசுவின் ஒளியைப் பிரதிபலித்து நட்சத்திரங்களைப் போல் பிரகாசிப்பீர்கள். நீங்கள் நோக்கமும், அர்த்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் அன்பையும் இரக்கத்தையும் பரப்பி, நம்பிக்கை மற்றும் நேர்மையின் கலங்கரை விளக்காய் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வெளிச்சத்தில் நடக்கவும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

