← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தருடைய ஆலயம். விரிசல்களையும், சேதங்களையும் சரிசெய்யுங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தருடைய ஆலயம்.

“வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான். 2 நாளாகமம் 24:4 அன்பான தேவ பிள்ளையே, இயேசு உங்களுக்குள் ஜீவன் தரும் ஆவியாய் வாசம் செய்வதால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். எனவே, உங்கள் உடல் இப்போது தேவனின் ஆலயமாயும், பரிசுத்த ஆவியின் பரிசுத்த வாசஸ்தலமாயும் இருக்கிறது. ஆவிக்குரிய வளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானது என்றாலும், உங்கள் சரீரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதும் இன்றியமையாததாகும். உங்கள் உடலின் ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணித்திருந்தால், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுவே. சரியான ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்குங்கள். உங்கள் உணவுமுறை முழு ஆரோக்கியம் நிறைந்ததாயும் உடலுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அனுதின உடற்பயிற்சியை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதும் அவசியம். ஏனெனில் இது உங்கள் உடலை வலுவாகவும் எதிர்ப்பாற்றல் நிறைந்ததாயும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், போதுமான ஓய்வுக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியம். உங்கள் உடலின் சீரமைப்புக்கும் புத்துணர்ச்சி பெறுதலுக்கும் இது மிகவும் முக்கியமானது என்பதால், ஒவ்வொரு இரவும் நீங்கள் போதுமான அளவு உறங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடலை மிகுந்த கவனத்துடன் பராமரியுங்கள். அதைக் கெடுத்துப்போடாதீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் காலைப் பனி போன்ற புத்துணர்ச்சியுடன் மலருவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே , என் உடலை மிகுந்த அக்கறையுடனும், பரிசுத்தத்துடனும் பராமரிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான். 2 நாளாகமம் 24:4 அன்பான தேவ பிள்ளையே, இயேசு உங்களுக்குள் ஜீவன் தரும் ஆவியாய் வாசம் செய்வதால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். எனவே, உங்கள் உடல் இப்போது தேவனின் ஆலயமாயும், பரிசுத்த ஆவியின் பரிசுத்த வாசஸ்தலமாயும் இருக்கிறது. ஆவிக்குரிய வளர்ச்சி சந்தேகத்திற்கு இடமின்றி முக்கியமானது என்றாலும், உங்கள் சரீரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிப்பதும் இன்றியமையாததாகும். உங்கள் உடலின் ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணித்திருந்தால், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இதுவே. சரியான ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் தொடங்குங்கள். உங்கள் உணவுமுறை முழு ஆரோக்கியம் நிறைந்ததாயும் உடலுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளாயும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அனுதின உடற்பயிற்சியை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதும் அவசியம். ஏனெனில் இது உங்கள் உடலை வலுவாகவும் எதிர்ப்பாற்றல் நிறைந்ததாயும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், போதுமான ஓய்வுக்கு முன்னுரிமை அளிப்பதும் அவசியம். உங்கள் உடலின் சீரமைப்புக்கும் புத்துணர்ச்சி பெறுதலுக்கும் இது மிகவும் முக்கியமானது என்பதால், ஒவ்வொரு இரவும் நீங்கள் போதுமான அளவு உறங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடலை மிகுந்த கவனத்துடன் பராமரியுங்கள். அதைக் கெடுத்துப்போடாதீர்கள். அவ்வாறு செய்வதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் காலைப் பனி போன்ற புத்துணர்ச்சியுடன் மலருவதை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே , என் உடலை மிகுந்த அக்கறையுடனும், பரிசுத்தத்துடனும் பராமரிக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.