← செய்திகளுக்குத் திரும்பு
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்யுங்கள்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தீமையை விட்டு விலகி, நன்மைசெய்யுங்கள்; என்றென்றைக்கும்...

“37:27 ஜீவனும் மரணமும் ஒன்றாயிருக்க முடியாது. நன்மைக்கும் தீமைக்குமிடையில் இதே வரைமுறைதான் செயல்படுகிறது. இருப்பினும், நாம் பெரும்பாலும் இவ்விரண்டினாலும் பாதிக்கப்பட்டோராகவே இருக்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப நிறமாறும் பச்சோந்திகள் போல் இருக்கிறோம். நாம் நிலையாயிருக்க வேண்டும் என்றும், நன்மை அல்லது தீமையில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். நன்மை செய்தால் ஆசிர்வாதங்கள் பெறுவோம்; தீமை செய்தால், நாம் சபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவோம். எனவே, நீங்கள் நித்திய ஜீவனை விரும்பினால், தீமையை விட்டுவிட்டு நன்மை செய்யத் தொடங்க வேண்டும். நற்குணம் கொண்டவராயிருக்க முயற்சி செய்யுங்கள். தேவனிடம் முழுமையாய்ச் சரணடைந்து அவர்மீது நம்பிக்கை கொண்டால், இயேசுவைப் போல் நற்குணம் கொண்ட வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, தீமையிலிருந்து விலகி, என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் நன்மை செய்யத் தொடங்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 2 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். சங்கீதம் 37:27 ஜீவனும் மரணமும் ஒன்றாயிருக்க முடியாது. நன்மைக்கும் தீமைக்குமிடையில் இதே வரைமுறைதான் செயல்படுகிறது. இருப்பினும், நாம் பெரும்பாலும் இவ்விரண்டினாலும் பாதிக்கப்பட்டோராகவே இருக்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப நிறமாறும் பச்சோந்திகள் போல் இருக்கிறோம். நாம் நிலையாயிருக்க வேண்டும் என்றும், நன்மை அல்லது தீமையில் ஏதோ ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார். நன்மை செய்தால் ஆசிர்வாதங்கள் பெறுவோம்; தீமை செய்தால், நாம் சபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவோம். எனவே, நீங்கள் நித்திய ஜீவனை விரும்பினால், தீமையை விட்டுவிட்டு நன்மை செய்யத் தொடங்க வேண்டும். நற்குணம் கொண்டவராயிருக்க முயற்சி செய்யுங்கள். தேவனிடம் முழுமையாய்ச் சரணடைந்து அவர்மீது நம்பிக்கை கொண்டால், இயேசுவைப் போல் நற்குணம் கொண்ட வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். ஜெபம்: அன்பான கர்த்தராகிய இயேசுவே, தீமையிலிருந்து விலகி, என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிகளிலும் நன்மை செய்யத் தொடங்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.