← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் ஒரு தலைவனாயிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் ஒரு தலைவனாயிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய்.2 சாமுவேல் 5:2 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டுப் பெரிய காரியங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். மற்றவர்களை வழிநடத்தவும், பராமரிக்கவும் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய தலைமைப் பண்புகளைப் பிரதிபலியுங்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சியாயிருக்கும் பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்குச் சாட்சியாக உங்கள் வாழ்க்கையை வாழ்வதே உங்கள் முதல் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். நித்திய ஒளியாகிய இயேசுவை இந்த உலகில் பிரதிபலிக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஞானத்தின் பொக்கிஷமான இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருக்கிறார். இவ்வுலகில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான எல்லா உத்திகளையும், அறிவுரைகளையும் அவர் உங்களுக்கு தருவார். உங்கள் ஜீவியம் தேவனுக்குப் புகழ்ச்சி உண்டாக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சமுதாயத்தில் சாட்சியுள்ளதோர் தலைவனாயிருக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய்.2 சாமுவேல் 5:2 அன்பு தேவ பிள்ளையே,நீங்கள் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டுப் பெரிய காரியங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். மற்றவர்களை வழிநடத்தவும், பராமரிக்கவும் நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவருடைய தலைமைப் பண்புகளைப் பிரதிபலியுங்கள். தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் இயேசு கிறிஸ்துவுக்குச் சாட்சியாயிருக்கும் பொறுப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்குச் சாட்சியாக உங்கள் வாழ்க்கையை வாழ்வதே உங்கள் முதல் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். நித்திய ஒளியாகிய இயேசுவை இந்த உலகில் பிரதிபலிக்க நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஞானத்தின் பொக்கிஷமான இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருக்கிறார். இவ்வுலகில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான எல்லா உத்திகளையும், அறிவுரைகளையும் அவர் உங்களுக்கு தருவார். உங்கள் ஜீவியம் தேவனுக்குப் புகழ்ச்சி உண்டாக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சமுதாயத்தில் சாட்சியுள்ளதோர் தலைவனாயிருக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.