சனிக்கிழமை, 18 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய். 1 சாமுவேல் 26:25 அன்பு தேவ பிள்ளையே, ஆசீர்வாதங்களைப் பெறவும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது, சோர்வுற்று விடவேண்டாம். மாறாக, அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக பார்த்து, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கவனியுங்கள். சில நேரங்களில், மிகவும் விலையேறப்பெற்ற வாழ்க்கைப் பாடங்கள் தோல்விகளின் மூலம் கற்றுக் கொள்ளப்படுகின்றன. உங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகள் உங்களை அழிக்காமல், உங்களை முன்பை விட பலமுள்ளவராய் மீண்டும் உருவாக்கத் தேவன் அனுமதிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனச்சோர்வூட்டும் எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் அடிபணிய வேண்டாம்; மாறாக, எழுந்து, உங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, மீண்டும் முயற்சி செய்யுங்கள். இயேசுவின் நாமத்தில் வெற்றியையும் ஜெயத்தையும் அறிக்கையிடுங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்க நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையில் சிறந்து விளங்கவும், உமக்குச் சாட்சியாய் இருக்கவும் என் பிரயாசங்களை ஆசீர்வதியும். ஆமென்.
நீங்கள் பெரிய காரியங்களைச் செய்வீர்கள், மேன்மேலும் வெற்றி...
“சனிக்கிழமை, 18 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய். 1 சாமுவேல் 26:25 அன்பு தேவ பிள்ளையே, ஆசீர்வாதங்களைப் பெறவும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் தோல்விகள் மற்றும் பின்னடைவுகளைச் சந்திக்கும் போது, சோர்வுற்று விடவேண்டாம். மாறாக, அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக பார்த்து, அவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றை கவனியுங்கள். சில நேரங்களில், மிகவும் விலையேறப்பெற்ற வாழ்க்கைப் பாடங்கள் தோல்விகளின் மூலம் கற்றுக் கொள்ளப்படுகின்றன. உங்கள் வாழ்வில் ஏற்படும் தோல்விகள் உங்களை அழிக்காமல், உங்களை முன்பை விட பலமுள்ளவராய் மீண்டும் உருவாக்கத் தேவன் அனுமதிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனச்சோர்வூட்டும் எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் அடிபணிய வேண்டாம்; மாறாக, எழுந்து, உங்கள் வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து, மீண்டும் முயற்சி செய்யுங்கள். இயேசுவின் நாமத்தில் வெற்றியையும் ஜெயத்தையும் அறிக்கையிடுங்கள், நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்க நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வாழ்க்கையில் சிறந்து விளங்கவும், உமக்குச் சாட்சியாய் இருக்கவும் என் பிரயாசங்களை ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

