← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் ஜீவவிருட்சமாய் இருக்க வேண்டும்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் ஜீவவிருட்சமாய் இருக்க வேண்டும்.

“புதன், 15 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம். நீதிமொழிகள் 11:30 நாம் வாழும் உலகம் ஊழல் நிறைந்ததாய் இருப்பதால் நீதியான வாழ்க்கை வாழ்வதென்பது சவாலானதாய் இருக்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில், கஷ்டங்கள், வலிகள் மற்றும் துன்பங்களை நீங்கள் சந்திக்கலாம். இருப்பினும், உங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் இந்தச் சவால்களை நீங்கள் மேற்கொண்டால், தேவன் உங்களைப் பற்றி மகிழ்ச்சியடைவார். சந்ததிகளுக்குக் கனிதரும் ஜீவ விருட்சத்தைப் போல் நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள். நீதியுள்ளவர்களாய் இருப்பது தேவ சாயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் உங்கள் வாழ்க்கை உடைந்த இருதயம் கொண்ட பலருக்குக் ஆறுதலையும், நம்பிக்கையையும் தரும். உங்கள் நிழலின் கீழ், பலர் தங்கள் கடந்தகாலத் தோல்விகளிலிருந்தெழுந்து மீண்டும் கட்டப்படுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து நீதியான வாழ்க்கை வாழவும், அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் எனக்கு உதவியருளும். என் ஜீவியம் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலைதலையும், மகிழ்ச்சியையும் தரட்டும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 15 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம். நீதிமொழிகள் 11:30 நாம் வாழும் உலகம் ஊழல் நிறைந்ததாய் இருப்பதால் நீதியான வாழ்க்கை வாழ்வதென்பது சவாலானதாய் இருக்கலாம். உங்கள் அன்றாட வாழ்க்கையில், கஷ்டங்கள், வலிகள் மற்றும் துன்பங்களை நீங்கள் சந்திக்கலாம். இருப்பினும், உங்கள் கோட்பாடுகளையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்காமல் இந்தச் சவால்களை நீங்கள் மேற்கொண்டால், தேவன் உங்களைப் பற்றி மகிழ்ச்சியடைவார். சந்ததிகளுக்குக் கனிதரும் ஜீவ விருட்சத்தைப் போல் நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பீர்கள். நீதியுள்ளவர்களாய் இருப்பது தேவ சாயலைப் பிரதிபலிக்கிறது. மேலும் உங்கள் வாழ்க்கை உடைந்த இருதயம் கொண்ட பலருக்குக் ஆறுதலையும், நம்பிக்கையையும் தரும். உங்கள் நிழலின் கீழ், பலர் தங்கள் கடந்தகாலத் தோல்விகளிலிருந்தெழுந்து மீண்டும் கட்டப்படுவார்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து நீதியான வாழ்க்கை வாழவும், அநேகருக்கு ஆசீர்வாதமாய் இருக்கவும் எனக்கு உதவியருளும். என் ஜீவியம் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கையையும், ஆறுதலைதலையும், மகிழ்ச்சியையும் தரட்டும். ஆமென்.