← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தருடைய வேதம் நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தருடைய வேதம் நம்முடைய ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது.

“செவ்வாய், 7 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.சங்கீதம் 19:7 உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தத்தளித்துக்கொண்டு சோர்வுற்றுக் காணப்படுகிறீர்களா? இன்றைய வேகமான உலகில், நாம் மிகவும் கடினமாய் உழைக்கிறோம். இது சோர்வுக்கு வழிவகுக்கிறது. ஆனால் நாம் அலட்சியப்படுத்துவதும், விட்டுவிடுவதும் தேவனுடனுள்ள நம்முடைய நேரமாகும். இயேசுவோடு அமைதியான நேரத்தைச் செலவிடுவது ஆத்துமாவுக்கு இன்றியமையாதது. இது அர்த்தமற்ற சடங்கல்ல, மாறாக, உங்களுக்கு ஊட்டமளித்துப் பலப்படுத்தும் ஓர் உயிர்நாடியாகும். இயேசுவே நாம் பின்பற்ற வேண்டிய வார்த்தையானவர். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், இயேசுவின் வார்த்தை ஒருபோதும் ஒழிந்து போகாது. அவர் ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறார். முழு மனதுடன் அவரைப் பின்பற்றி அவருடைய வழிகளில் நடவுங்கள். அவர் உங்களைப் புதுப்பித்துப் புதிய ஜீவியத்தைத் தருகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாய் விடாமல், தம்மோடிருக்க உங்களை நித்தியத்திற்கு அழைத்துச் செல்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, களைத்துப்போன என் ஆத்துமாவை உயிர்ப்பித்து என் வாழ்வை புதுப்பியும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 7 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது.சங்கீதம் 19:7 உங்கள் ஆவிக்குரிய வாழ்வில் தத்தளித்துக்கொண்டு சோர்வுற்றுக் காணப்படுகிறீர்களா? இன்றைய வேகமான உலகில், நாம் மிகவும் கடினமாய் உழைக்கிறோம். இது சோர்வுக்கு வழிவகுக்கிறது. ஆனால் நாம் அலட்சியப்படுத்துவதும், விட்டுவிடுவதும் தேவனுடனுள்ள நம்முடைய நேரமாகும். இயேசுவோடு அமைதியான நேரத்தைச் செலவிடுவது ஆத்துமாவுக்கு இன்றியமையாதது. இது அர்த்தமற்ற சடங்கல்ல, மாறாக, உங்களுக்கு ஊட்டமளித்துப் பலப்படுத்தும் ஓர் உயிர்நாடியாகும். இயேசுவே நாம் பின்பற்ற வேண்டிய வார்த்தையானவர். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், இயேசுவின் வார்த்தை ஒருபோதும் ஒழிந்து போகாது. அவர் ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறார். முழு மனதுடன் அவரைப் பின்பற்றி அவருடைய வழிகளில் நடவுங்கள். அவர் உங்களைப் புதுப்பித்துப் புதிய ஜீவியத்தைத் தருகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாய் விடாமல், தம்மோடிருக்க உங்களை நித்தியத்திற்கு அழைத்துச் செல்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, களைத்துப்போன என் ஆத்துமாவை உயிர்ப்பித்து என் வாழ்வை புதுப்பியும். ஆமென்.