← செய்திகளுக்குத் திரும்பு
ஒரு தாய் தேற்றுவதுபோல் தேவன் உங்களைத் தேற்றுவார்.
படத்தைப் பதிவிறக்கு

ஒரு தாய் தேற்றுவதுபோல் தேவன் உங்களைத் தேற்றுவார்.

“புதன், 24 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.ஏசாயா 66:13 தாய்மார்கள் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் தேவ ஆசீர்வாதங்களின் தனித்துவமான பாத்திரங்கள். உங்கள் தாய்க்காக நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் அவரைப் பெறுவதற்கு நீங்கள் பாக்கியம் பெற்றிருந்தால், தயவுசெய்து தேவனுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருந்து, ஒரு விசேஷித்த வழியில் உங்கள் தாயை ஆசீர்வதியுங்கள். உங்களை வளர்ப்பதற்கு அவள் செய்த அனைத்துத் தியாகங்களுக்கும் அன்புக்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவள் ஒரு தன்னலமற்ற ஆத்துமாவாய் இருந்து, தேவ அன்பைச் செயலில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறாள். தேவன், இரக்கமும் அன்பும் கொண்டவர். தாம் ஒரு தாயைப் போலவே உங்களைத் தேற்றுவதாய் அவர் உறுதியளிக்கிறார். நீங்கள் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். அவர் உங்களை வெகுவாய்க் கவனித்துக்கொள்கிறார். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் கடந்துசென்றுகொண்டிருந்தாலும் பரவாயில்லை, வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும்,அவரை நம்புங்கள். உங்களை உயர்த்தவும் உங்களைப் பலப்படுத்தவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் தாயாக இருந்து என்னை பராமரிப்பதற்காக உமக்கு நன்றி. என்னை உம் நெஞ்சோடு அரவணைத்து உமது அன்பை என்மேல் ஊற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன், 24 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.ஏசாயா 66:13 தாய்மார்கள் ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் தேவ ஆசீர்வாதங்களின் தனித்துவமான பாத்திரங்கள். உங்கள் தாய்க்காக நீங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் அவரைப் பெறுவதற்கு நீங்கள் பாக்கியம் பெற்றிருந்தால், தயவுசெய்து தேவனுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருந்து, ஒரு விசேஷித்த வழியில் உங்கள் தாயை ஆசீர்வதியுங்கள். உங்களை வளர்ப்பதற்கு அவள் செய்த அனைத்துத் தியாகங்களுக்கும் அன்புக்கும் உங்கள் நன்றியைத் தெரிவிக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவள் ஒரு தன்னலமற்ற ஆத்துமாவாய் இருந்து, தேவ அன்பைச் செயலில் தொடர்ந்து வெளிப்படுத்துகிறாள். தேவன், இரக்கமும் அன்பும் கொண்டவர். தாம் ஒரு தாயைப் போலவே உங்களைத் தேற்றுவதாய் அவர் உறுதியளிக்கிறார். நீங்கள் அவருக்கு விலையேறப்பெற்றவர்கள். அவர் உங்களை வெகுவாய்க் கவனித்துக்கொள்கிறார். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் கடந்துசென்றுகொண்டிருந்தாலும் பரவாயில்லை, வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும்,அவரை நம்புங்கள். உங்களை உயர்த்தவும் உங்களைப் பலப்படுத்தவும் அவர் ஆயத்தமாயிருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் தாயாக இருந்து என்னை பராமரிப்பதற்காக உமக்கு நன்றி. என்னை உம் நெஞ்சோடு அரவணைத்து உமது அன்பை என்மேல் ஊற்றும். ஆமென்.