சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சங்கீதம் 25:8 # தேவன் நியாயமும் நீதியுமானவர். அவர் பட்சபாதமுள்ளவரல்ல.# அவர் ஒவ்வொருவரையும் சரிசமமாய் நடத்தி எல்லாருக்கும் நீதிசெய்கிறார். 1. உங்கள் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் அல்லது பணியிடத்தில் மேற்பார்வையாளர்களால் நீங்கள் தவறாக நடத்தப்படுகிறீர்களா?2. நியாயமற்ற வணிகம் அல்லது பணித்தள முறைகேடுகளால் உங்கள் நன்மைகளை இழக்கிறீர்களா?3. உங்களுக்காகப் பேச யாருமில்லை என்று நொந்துபோனீர்களா? # உங்கள் வேதனைகளைக் கர்த்தரிடத்தில் ஜெபத்தில் கொண்டுசெல்லுங்கள்.# உங்கள் பிரச்சனைகளை இயேசுவிடம் ஒப்புக்கொடுத்து அவர் உங்களுக்காக யுத்தம்பண்ண இடம் கொடுங்கள்.# உரிய நேரத்தில் அவர் உங்களுக்கு நியாயம் செய்வார். # நீங்கள் தவறும்போது உங்களைச் சீர்ப்படுத்தி, செவ்வையான பாதைக்கு அவர் உங்களைத் திருப்பி விடுவார்.# இந்தத் திருத்தம் வேதனையுள்ளதாய் இருந்தாலும் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.# இதன் விளைவாக, கர்த்தருடைய சிட்சையை அற்பமாய் எண்ணாதிருங்கள்.# மாறாக, இயேசுவுக்காய் நியாயமும் நீதியுமான வாழ்க்கை வாழப் பிரியாசப்படுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நியாயமும் நீதியுமாய் இருக்க எனக்குதவும். ஆமென்.
தேவன் நியாயமும் நீதியும் நிறைந்தவர்.
“சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சங்கீதம் 25:8 # தேவன் நியாயமும் நீதியுமானவர். அவர் பட்சபாதமுள்ளவரல்ல.# அவர் ஒவ்வொருவரையும் சரிசமமாய் நடத்தி எல்லாருக்கும் நீதிசெய்கிறார். 1. உங்கள் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் அல்லது பணியிடத்தில் மேற்பார்வையாளர்களால் நீங்கள் தவறாக நடத்தப்படுகிறீர்களா?2. நியாயமற்ற வணிகம் அல்லது பணித்தள முறைகேடுகளால் உங்கள் நன்மைகளை இழக்கிறீர்களா?3. உங்களுக்காகப் பேச யாருமில்லை என்று நொந்துபோனீர்களா? # உங்கள் வேதனைகளைக் கர்த்தரிடத்தில் ஜெபத்தில் கொண்டுசெல்லுங்கள்.# உங்கள் பிரச்சனைகளை இயேசுவிடம் ஒப்புக்கொடுத்து அவர் உங்களுக்காக யுத்தம்பண்ண இடம் கொடுங்கள்.# உரிய நேரத்தில் அவர் உங்களுக்கு நியாயம் செய்வார். # நீங்கள் தவறும்போது உங்களைச் சீர்ப்படுத்தி, செவ்வையான பாதைக்கு அவர் உங்களைத் திருப்பி விடுவார்.# இந்தத் திருத்தம் வேதனையுள்ளதாய் இருந்தாலும் அது உங்களுக்கு நன்மை பயக்கும்.# இதன் விளைவாக, கர்த்தருடைய சிட்சையை அற்பமாய் எண்ணாதிருங்கள்.# மாறாக, இயேசுவுக்காய் நியாயமும் நீதியுமான வாழ்க்கை வாழப் பிரியாசப்படுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் நியாயமும் நீதியுமாய் இருக்க எனக்குதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

