← செய்திகளுக்குத் திரும்பு
பயப்படாதிருங்கள். தேவன் உங்களுக்குச் சகாயர்.
படத்தைப் பதிவிறக்கு

பயப்படாதிருங்கள்.

“திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 தேவனுடைய பிள்ளைகளின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று உண்மை. நம் தேவன் உண்மையுள்ளவர். அவர், எவரும் எப்போதும் நம்பக்கூடிய மிகவும் நம்பகமான நபர். அவர் தனது வாக்குறுதிகளைக் கனப்படுத்துகிறார். அவற்றைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுகிறார். # துரதிர்ஷ்டவசமாக, தன்னலமிகுந்த இன்றைய உலகில் இப்படிப்பட்ட இந்தக் குணாதிசயம் மிகவும் அரிதாகி வருகிறது.# காப்பாற்றாத வாக்குறுதிகள் மோதலுக்கு வித்திடுவதை நாம் அடிக்கடி காண்கிறோம்.# பலர் தங்கள் நல்ல நிலையைத் தக்கவைப்பதற்காக அல்லது நெருக்கடியில் தங்களைப் பாதுகாப்பதற்காக, அளவற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி, அந்த உத்தரவாதங்களை முற்றிலும் மறந்துவிடுவார்கள்.# அப்படிப்பட்டவர்கள் முற்றிலும் உண்மையில்லாதவர்களும் மற்றும் நம்பத்தகாதவர்களும் ஆவர். # நீங்கள் சொல்வதையெல்லாம் நினைவில் தக்கவைப்பீர்களா?# உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நீங்கள் எவ்வளவு உத்தமமாய் இருக்கிறீர்கள்?# நமது கொள்கைகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இருப்பது, நாம் உண்மையாய் இருக்க உதவுகிறது.# இது, நமது அன்றாட வாழ்க்கைக்கான பொறுப்புணர்வை உருவாக்குவதிலும் நமது உண்மையில் வளர்வதிலும் துணைபுரிகிறது. # ஒரு நாள் தேவனுக்கு முன்பாக, நம் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.# கர்த்தராகிய இயேசு உங்களை உண்மையுள்ள நபராகக் கருதுவாரா?# உறுதியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்த்து மாற்றங்களைச் செய்வதற்கான நேரம் இது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் என்னைச் சுற்றியுள்ளோர்க்கும் உண்மையாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபிரெயர் 10:23 தேவனுடைய பிள்ளைகளின் மிக முக்கியமான பண்புகளில் ஒன்று உண்மை. நம் தேவன் உண்மையுள்ளவர். அவர், எவரும் எப்போதும் நம்பக்கூடிய மிகவும் நம்பகமான நபர். அவர் தனது வாக்குறுதிகளைக் கனப்படுத்துகிறார். அவற்றைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுகிறார். # துரதிர்ஷ்டவசமாக, தன்னலமிகுந்த இன்றைய உலகில் இப்படிப்பட்ட இந்தக் குணாதிசயம் மிகவும் அரிதாகி வருகிறது.# காப்பாற்றாத வாக்குறுதிகள் மோதலுக்கு வித்திடுவதை நாம் அடிக்கடி காண்கிறோம்.# பலர் தங்கள் நல்ல நிலையைத் தக்கவைப்பதற்காக அல்லது நெருக்கடியில் தங்களைப் பாதுகாப்பதற்காக, அளவற்ற வாக்குறுதிகளை வாரி வழங்கி, அந்த உத்தரவாதங்களை முற்றிலும் மறந்துவிடுவார்கள்.# அப்படிப்பட்டவர்கள் முற்றிலும் உண்மையில்லாதவர்களும் மற்றும் நம்பத்தகாதவர்களும் ஆவர். # நீங்கள் சொல்வதையெல்லாம் நினைவில் தக்கவைப்பீர்களா?# உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நீங்கள் எவ்வளவு உத்தமமாய் இருக்கிறீர்கள்?# நமது கொள்கைகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மை இருப்பது, நாம் உண்மையாய் இருக்க உதவுகிறது.# இது, நமது அன்றாட வாழ்க்கைக்கான பொறுப்புணர்வை உருவாக்குவதிலும் நமது உண்மையில் வளர்வதிலும் துணைபுரிகிறது. # ஒரு நாள் தேவனுக்கு முன்பாக, நம் வார்த்தைகளுக்கும் செயலுக்கும் நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.# கர்த்தராகிய இயேசு உங்களை உண்மையுள்ள நபராகக் கருதுவாரா?# உறுதியாகத் தெரியவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையைப் பரிசோதித்துப் பார்த்து மாற்றங்களைச் செய்வதற்கான நேரம் இது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கும் என்னைச் சுற்றியுள்ளோர்க்கும் உண்மையாய் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.