வியாழன், 4 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 9:10 வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல முடியாமல், சிக்கித் தவிப்பது போன்று நம்பிக்கையில்லாமல் காணப்படுகிறீர்களா? ஒரு அதிசயம் நிகழாமல் உங்கள் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காகச் சில நற்செய்திகள் என்னிடம் உள்ளன. இயேசு ஒரு அதிசயம் செய்யும் தேவன். அவரால் முடியாதது எதுவுமில்லை. உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்பி, உங்கள் வாழ்வையும் சூழ்நிலைகளையும் அவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களுக்காகக் கற்பனை செய்ய முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்வார். எனவே, அவருடைய வழிகாட்டுதல்களை முழு மனதுடன் பின்பற்றி உண்மையாயிருங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பக் காரியங்கள் நடக்காதபோது பீதி அடைய வேண்டாம். இயேசுவை நம்புங்கள். அவர் நிச்சயமாய் இடைப்பட்டு உங்களைக் காப்பாற்ற அற்புதங்களைச் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் வாழ்க்கையில் இடைப்படும்படி, என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். அதிசயங்களைச் செய்து என்னைக் காப்பாற்றும். ஆமென்.
தேவன் உங்கள் வாழ்வில் எண்ணிமுடியாத அதிசயங்களைச் செய்வார்.
“வியாழன், 4 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 9:10 வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல முடியாமல், சிக்கித் தவிப்பது போன்று நம்பிக்கையில்லாமல் காணப்படுகிறீர்களா? ஒரு அதிசயம் நிகழாமல் உங்கள் தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காகச் சில நற்செய்திகள் என்னிடம் உள்ளன. இயேசு ஒரு அதிசயம் செய்யும் தேவன். அவரால் முடியாதது எதுவுமில்லை. உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்பி, உங்கள் வாழ்வையும் சூழ்நிலைகளையும் அவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களுக்காகக் கற்பனை செய்ய முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்வார். எனவே, அவருடைய வழிகாட்டுதல்களை முழு மனதுடன் பின்பற்றி உண்மையாயிருங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பக் காரியங்கள் நடக்காதபோது பீதி அடைய வேண்டாம். இயேசுவை நம்புங்கள். அவர் நிச்சயமாய் இடைப்பட்டு உங்களைக் காப்பாற்ற அற்புதங்களைச் செய்வார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் வாழ்க்கையில் இடைப்படும்படி, என் வாழ்க்கையை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். அதிசயங்களைச் செய்து என்னைக் காப்பாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

