திங்கட்கிழமை, 29 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும். ஏசாயா 35:10 - நீங்கள் இன்று சோதனைகள் மற்றும் இன்னல்கள் வழியாய்க் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்களா?- வாழ்க்கையில் தொடரும் பின்னடைவுகளால் உங்கள் விசுவாசத்தில் கேள்வி எழுந்துள்ளதா?- சோதனைகள் மற்றும் சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே மனம் தளராதீர்கள்.- தேவன் உங்கள் துக்கத்தைச் சீக்கிரத்தில் நீக்குவார்.- அவர் உங்களை நேசித்துத் தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.- பரிசுத்த ஆவியின் மூலம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க முடியும். - சவால்களையே கவனம் செலுத்தும்படியான சோதனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.- அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் உங்கள் சாதனைகளை எண்ணி, அவை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவற்றைக் கொண்டாடுங்கள்.- ஒவ்வொரு படியும் நித்திய மகிழ்ச்சியை நோக்கிச் செல்லும் முன்னேற்றப் படியாகும். - அதே சமயம், உங்களைப் போன்ற பலவீனமானவர்களும் போராடுபவர்களுமான மற்றோரை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.- அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.- வேதத்தில், யோபு தனது பிரச்சனைகளின் மத்தியில் தனது நண்பர்களுக்காக ஜெபித்தார்.- தேவன் யோபின் ஜெபத்தைக் கேட்டு, அவனுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் அவனை விடுவித்தார்.- இதேபோலவே, தங்கள் பலவீனங்களுடன் போராடுபவர்களுக்கு ஜெபித்து உதவுங்கள். - ஒரு எளிய ஊக்க வார்த்தை கூடத் தோல்விகளைச் சந்தித்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.- இது போன்ற காரியங்கள் தேவனை மகிழ்விக்கும், உங்கள் மகிழ்ச்சி பெருகும்.- தேவன் உங்களை நித்திய மகிழ்ச்சியால் முடிசூட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்க்கையை நித்திய மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்.
தேவன், நித்திய மகிழ்ச்சி உங்கள் தலையின்மேலிருக்கும்படிச் செய்வார்.
“திங்கட்கிழமை, 29 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும். ஏசாயா 35:10 - நீங்கள் இன்று சோதனைகள் மற்றும் இன்னல்கள் வழியாய்க் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்களா?- வாழ்க்கையில் தொடரும் பின்னடைவுகளால் உங்கள் விசுவாசத்தில் கேள்வி எழுந்துள்ளதா?- சோதனைகள் மற்றும் சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே மனம் தளராதீர்கள்.- தேவன் உங்கள் துக்கத்தைச் சீக்கிரத்தில் நீக்குவார்.- அவர் உங்களை நேசித்துத் தமது பரிசுத்த ஆவியை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.- பரிசுத்த ஆவியின் மூலம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க முடியும். - சவால்களையே கவனம் செலுத்தும்படியான சோதனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.- அதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் உங்கள் சாதனைகளை எண்ணி, அவை எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அவற்றைக் கொண்டாடுங்கள்.- ஒவ்வொரு படியும் நித்திய மகிழ்ச்சியை நோக்கிச் செல்லும் முன்னேற்றப் படியாகும். - அதே சமயம், உங்களைப் போன்ற பலவீனமானவர்களும் போராடுபவர்களுமான மற்றோரை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.- அவர்கள் சொல்வதைக் கேட்கவும், அவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் நேரம் ஒதுக்குங்கள்.- வேதத்தில், யோபு தனது பிரச்சனைகளின் மத்தியில் தனது நண்பர்களுக்காக ஜெபித்தார்.- தேவன் யோபின் ஜெபத்தைக் கேட்டு, அவனுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் அவனை விடுவித்தார்.- இதேபோலவே, தங்கள் பலவீனங்களுடன் போராடுபவர்களுக்கு ஜெபித்து உதவுங்கள். - ஒரு எளிய ஊக்க வார்த்தை கூடத் தோல்விகளைச் சந்தித்தவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும்.- இது போன்ற காரியங்கள் தேவனை மகிழ்விக்கும், உங்கள் மகிழ்ச்சி பெருகும்.- தேவன் உங்களை நித்திய மகிழ்ச்சியால் முடிசூட்டுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்க்கையை நித்திய மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

