← செய்திகளுக்குத் திரும்பு
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு
படத்தைப் பதிவிறக்கு

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு

“நீதிமொழிகள் 15:6 நாம் இயேசுவை நம்பி, அவரை நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ள நாம் விட்டுவிடக்கூடாது. இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கினார் என்று நாம் உறுதியாய் நம்பலாம். இந்தப் புதிய வாழ்வில் நாம், திவ்ய சுபாவத்துடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருக்க வேண்டும். நாம் நீதியான வாழ்க்கை வாழும்போது, ​​இயேசுவிடம் காணப்படும் ஞானம், அறிவு, புரிதல் ஆகிய பொக்கிஷங்களை அனுபவிப்போம். வேதத்தின்படி, தேவன் நீதிமான்களுக்குச் சமாதானத்தைத் தந்து, உச்சிதமான கோதுமையால் அவர்களைப் போஷிப்பார். தேவன் நம் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, வியாதியை நம்மை விட்டு விலக்கி நம்மைப் பாதுகாப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியாய் வாழ்ந்து உமது பொக்கிஷங்களை நான் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு. நீதிமொழிகள் 15:6 நாம் இயேசுவை நம்பி, அவரை நம் இரட்சகராய் ஏற்றுக்கொள்ளும்போது அவருடைய இரத்தத்தால் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். குற்ற உணர்வு நம்மை ஆட்கொள்ள நாம் விட்டுவிடக்கூடாது. இயேசு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை நீதிமான்களாக்கினார் என்று நாம் உறுதியாய் நம்பலாம். இந்தப் புதிய வாழ்வில் நாம், திவ்ய சுபாவத்துடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாயிருக்க வேண்டும். நாம் நீதியான வாழ்க்கை வாழும்போது, ​​இயேசுவிடம் காணப்படும் ஞானம், அறிவு, புரிதல் ஆகிய பொக்கிஷங்களை அனுபவிப்போம். வேதத்தின்படி, தேவன் நீதிமான்களுக்குச் சமாதானத்தைத் தந்து, உச்சிதமான கோதுமையால் அவர்களைப் போஷிப்பார். தேவன் நம் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதித்து, வியாதியை நம்மை விட்டு விலக்கி நம்மைப் பாதுகாப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீதியாய் வாழ்ந்து உமது பொக்கிஷங்களை நான் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.