வியாழன், 21 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். ஏசாயா 60 :19 நீங்கள் பாதுகாப்பின்மையுடன் போராடி, அவமானம் நிறைந்த கடந்த காலத்தை நினைத்துப் புலம்புகிறீர்களா?மேன்மைக்குத் திரும்புவதும் சிறப்பான நாட்களை அனுபவிப்பதும் சாத்தியமற்றது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த உலகில் யாரும் பூரணரல்ல. எல்லாரும் பாவம் செய்து தேவ மகிமையை இழந்துவிட்டார்கள். இருப்பினும், தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ்வதற்கு இது ஒரு போக்குச் சொல்லாக முடியாது. நீங்கள் இனி இருளில் வாழ வேண்டியதில்லை; உங்கள் வாழ்க்கையில் ஒளி உதித்திருக்கிறது. இயேசுவே அவ்வொளி. அவர் உங்கள் நித்திய வெளிச்சமாய் இருப்பார். அவருடைய மகிமை உங்களிடத்திலும் உங்கள் மீதும் காணப்படும். நம்முடைய தேவன் நீதியுள்ளவரும் பாரபட்சமற்றவருமாய் இருக்கிறார். தம்மிடம் வரும் யாவருக்கும் உதவுவதாய்த் தம்முடைய அன்பினால் வாக்குறுதி அளித்துள்ளார். உங்களை பயமுறுத்துவதற்குச் சுயமாய்த் தூண்டப்படுகிற காரியங்களை அனுமதியாதிருங்கள். உங்கள் கூட்டிலிருந்து வெளியே வந்து, உங்களை நீங்களே கண்டிப்பதை நிறுத்துங்கள். உங்கள் தேவன் உங்கள் மகிமையாய் இருப்பார். நீங்கள் தொலைத்த உங்கள் பெயரையும் கனத்தையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்கு நன்றி செலுத்துகிறேன். நான் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு என் நம்பிக்கையையும், மனவுறுதியையும் பெருகச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் தேவன் உங்கள் மகிமையாய் இருப்பார்
“நீங்கள் தொலைத்த உங்கள் பெயரையும் கனத்தையும் மீட்டெடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்கு நன்றி செலுத்துகிறேன். நான் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு என் நம்பிக்கையையும், மனவுறுதியையும் பெருகச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

