← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் தமது ஆவியை உங்கள்மேல் ஊற்றுவார்

“செவ்வாய், 19 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன். அப்போஸ்தலர் 2:18 இயேசு, தம்முடைய பரிசுத்த ஆவியானவரைத் தமது சீஷர்களாகிய அனைவருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும் வாக்களித்தார். பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய சாட்சிகளாய் இருக்கும்படி நம்மைப் பெலப்படுத்துகிறார். * நீங்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறீர்களா?* அவருடைய சீஷராய், கர்த்தருக்காகத் தீமைக்கு எதிரான நல்ல போராட்டத்தை போராடும் போர்வீரராய் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காய் நாம் பரிந்துபேசி, இருளிலிருருந்து அவர்களை மீட்க வேண்டும்.* நம்முடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்குகேற்றவைகளாய் இராமல் அரண்களை நிர்மூலமாக்கத் தக்க தேவபெலமுள்ளவைகளாய் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.* வரவிருக்கும் நீண்ட போருக்கு உங்களைத் தகுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். * பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? இல்லை என்றால் இன்றே இயேசுவிடம் கேளுங்கள்.* தேவன் தம்முடைய ஆவியை உங்கள்மேல் பொழிவார்.* இந்த வாய்ப்பைப் புறக்கணிக்காதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்குப் பரிசுத்த ஆவியானவர் தேவை. நீர் வாக்குப்பண்ணினபடி என்னை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 19 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என்னுடைய ஊழியக்காரர் மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன். அப்போஸ்தலர் 2:18 இயேசு, தம்முடைய பரிசுத்த ஆவியானவரைத் தமது சீஷர்களாகிய அனைவருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும் வாக்களித்தார். பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய சாட்சிகளாய் இருக்கும்படி நம்மைப் பெலப்படுத்துகிறார். * நீங்கள் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறீர்களா?* அவருடைய சீஷராய், கர்த்தருக்காகத் தீமைக்கு எதிரான நல்ல போராட்டத்தை போராடும் போர்வீரராய் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்.* அழிந்துகொண்டிருக்கும் ஆத்துமாக்களுக்காய் நாம் பரிந்துபேசி, இருளிலிருருந்து அவர்களை மீட்க வேண்டும்.* நம்முடைய போர் ஆயுதங்கள் மாம்சத்துக்குகேற்றவைகளாய் இராமல் அரண்களை நிர்மூலமாக்கத் தக்க தேவபெலமுள்ளவைகளாய் இருக்கிறது என்று வேதம் சொல்கிறது.* வரவிருக்கும் நீண்ட போருக்கு உங்களைத் தகுதிப்படுத்தவும், பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார். * பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? இல்லை என்றால் இன்றே இயேசுவிடம் கேளுங்கள்.* தேவன் தம்முடைய ஆவியை உங்கள்மேல் பொழிவார்.* இந்த வாய்ப்பைப் புறக்கணிக்காதீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனக்குப் பரிசுத்த ஆவியானவர் தேவை. நீர் வாக்குப்பண்ணினபடி என்னை நிரப்பும். ஆமென்.