புதன்கிழமை, 20 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். சங்கீதம் 25:10 நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்வை அவருக்காய் வாழ முடிவெடுத்தபோது, அவருடைய இரத்தத்தால் மூடப்பட்டு அவருடனான உடன்படிக்கையின் உறவுக்குள் பிரவேசித்தீர்கள். இந்த உடன்படிக்கையைக் கனம்பண்ணும் காரியத்தில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உண்மையாய் இருக்கிறீர்கள்? இயேசுவுடன் நெருக்கமாக இருப்பது, அவருடைய வழிகளைப் பின்பற்றுவது மற்றும் தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வது என்ற அனைத்தும் இந்த உடன்படிக்கையைக் கனம்பண்ணி அதற்குப் பிரதியுத்தரம் சொல்லும் வழிகளாகும். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் கிறிஸ்துவின் உறுதியான அன்பையும், உண்மையையும் அனுபவிக்க முடியும். அவருடைய அன்பிலும் சத்தியத்திலும் நடப்பதன் மூலம் உங்கள் உடன்படிக்கையின் உறவை வெளிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் என் உடன்படிக்கையின் உறவைத் தற்காக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
அன்பிலும் உண்மையிலும் நடவுங்கள்
“புதன்கிழமை, 20 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். சங்கீதம் 25:10 நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, உங்கள் வாழ்வை அவருக்காய் வாழ முடிவெடுத்தபோது, அவருடைய இரத்தத்தால் மூடப்பட்டு அவருடனான உடன்படிக்கையின் உறவுக்குள் பிரவேசித்தீர்கள். இந்த உடன்படிக்கையைக் கனம்பண்ணும் காரியத்தில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உண்மையாய் இருக்கிறீர்கள்? இயேசுவுடன் நெருக்கமாக இருப்பது, அவருடைய வழிகளைப் பின்பற்றுவது மற்றும் தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்வது என்ற அனைத்தும் இந்த உடன்படிக்கையைக் கனம்பண்ணி அதற்குப் பிரதியுத்தரம் சொல்லும் வழிகளாகும். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் கிறிஸ்துவின் உறுதியான அன்பையும், உண்மையையும் அனுபவிக்க முடியும். அவருடைய அன்பிலும் சத்தியத்திலும் நடப்பதன் மூலம் உங்கள் உடன்படிக்கையின் உறவை வெளிப்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் என் உடன்படிக்கையின் உறவைத் தற்காக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

