வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 16:9 உத்தி என்பது நீண்ட கால இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு கவனமாய்த் திட்டமிடுவதைக் குறிக்கிறது. உத்தியுள்ள யோசனை என்பது முழுக் காட்சியையும் காண்பதும், அந்த நோக்கங்களை அடையத் திட்டங்களை உருவாக்குவதுமாகும். வணிகம், தனிப்பட்ட மேம்பாடு மற்றும் ஊழியம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இவ்வகையான சிந்தனை முக்கியமானது. சிந்திக்கவும் திட்டமிடவும் தேவன் நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் நம்முடைய வெற்றியானது, நம் திட்டங்கள் தேவனுடைய சித்தத்துடன் ஒத்துப்போகிறதா என்பதையும், அவருடைய ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நாம் நாடுகிறோமா என்பதையும் பொறுத்தே பெரும்பாலும் இருக்கின்றது. யுத்தக் காலங்கள், அல்லது அன்றாட நிர்வாகம் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் தேவனின் ஆலோசனையை நாடிய தலைவர்களை வேதம் விளக்குகிறது. #அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.# சூழ்நிலைகளை ஆராய்ந்து, சாதகம் மற்றும் பாதகங்களை எடைபோட்டு, முடிவெடுப்பதற்கு முன் தேவ வழிகாட்டுதலை நாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் ஜெயம் கிடைக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு உத்தி நிறைந்த சிந்தனையாளராய் இருக்க எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உம்முடைய திட்டங்கள் மற்றும் எண்ணங்களுடன் என்னை இணைத்துக் கொள்ளவும் உதவி செய்யும். ஆமென்.
ஒரு மனிதனின் இருதயம் அவனது வழியைத் திட்டமிடுகிறது; அவனுடைய...
“வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். நீதிமொழிகள் 16:9 உத்தி என்பது நீண்ட கால இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு கவனமாய்த் திட்டமிடுவதைக் குறிக்கிறது. உத்தியுள்ள யோசனை என்பது முழுக் காட்சியையும் காண்பதும், அந்த நோக்கங்களை அடையத் திட்டங்களை உருவாக்குவதுமாகும். வணிகம், தனிப்பட்ட மேம்பாடு மற்றும் ஊழியம் உட்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் இவ்வகையான சிந்தனை முக்கியமானது. சிந்திக்கவும் திட்டமிடவும் தேவன் நமக்குத் திறனைக் கொடுத்திருக்கிறார். இருப்பினும் நம்முடைய வெற்றியானது, நம் திட்டங்கள் தேவனுடைய சித்தத்துடன் ஒத்துப்போகிறதா என்பதையும், அவருடைய ஆலோசனையையும் வழிநடத்துதலையும் நாம் நாடுகிறோமா என்பதையும் பொறுத்தே பெரும்பாலும் இருக்கின்றது. யுத்தக் காலங்கள், அல்லது அன்றாட நிர்வாகம் மற்றும் திட்ட மேலாண்மை போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் தேவனின் ஆலோசனையை நாடிய தலைவர்களை வேதம் விளக்குகிறது. #அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும்.# சூழ்நிலைகளை ஆராய்ந்து, சாதகம் மற்றும் பாதகங்களை எடைபோட்டு, முடிவெடுப்பதற்கு முன் தேவ வழிகாட்டுதலை நாடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் ஜெயம் கிடைக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு உத்தி நிறைந்த சிந்தனையாளராய் இருக்க எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உம்முடைய திட்டங்கள் மற்றும் எண்ணங்களுடன் என்னை இணைத்துக் கொள்ளவும் உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

