← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களுக்கு நல்வழியைக் காட்டுவார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களுக்கு நல்வழியைக் காட்டுவார்

“ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். சங்கீதம் 25:8 (TRV) நம் தேவன் நல்ல தேவன். அவர் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் நீதியுள்ளதோர் தேவனாயும் பட்சபாதமற்றவராயும் இருக்கிறார். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே, நீதியான வாழ்க்கை வாழ அவர் நமக்கு அறிவுறுத்தினார். நாம் அறிவுரைகளைப் புரிந்து கொள்ளத் தவறியபோது​ அவர், நன்மை செய்கிறவாராய்ச் சுற்றித் திரிந்த இயேசுவின் மூலம், நித்திய ஜீவனுக்குப் போகும் வழியைப் போதித்து, சரியான வாழ்க்கை முறையைக் காட்டினார். நண்பரைப்போல் பழகிய அவர், வழிதவறிச் செல்வோரை மீண்டும் சரியான வாழ்க்கைப் பாதைக்கு வரும்படிக்கு வழிகாட்டினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் மாறாத தேவன். குழப்பம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அதற்குப் பதிலாய், தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் சிருஷ்டிகராயும் உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்தவராயும் இருப்பதால், அவர் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் சரியானதைச் செய்கிறார். உங்களுக்கு எது சிறந்தது என்பதையும், அதற்குரிய குறித்த நேரத்தையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை நம்பவும் அவருடைய வழிகளை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நடக்க வேண்டிய நல் வழியை எனக்குக் காட்டும். நான் உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். சங்கீதம் 25:8 (TRV) நம் தேவன் நல்ல தேவன். அவர் எல்லோரையும் நேசிக்கிறார். அவர் நீதியுள்ளதோர் தேவனாயும் பட்சபாதமற்றவராயும் இருக்கிறார். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே, நீதியான வாழ்க்கை வாழ அவர் நமக்கு அறிவுறுத்தினார். நாம் அறிவுரைகளைப் புரிந்து கொள்ளத் தவறியபோது​ அவர், நன்மை செய்கிறவாராய்ச் சுற்றித் திரிந்த இயேசுவின் மூலம், நித்திய ஜீவனுக்குப் போகும் வழியைப் போதித்து, சரியான வாழ்க்கை முறையைக் காட்டினார். நண்பரைப்போல் பழகிய அவர், வழிதவறிச் செல்வோரை மீண்டும் சரியான வாழ்க்கைப் பாதைக்கு வரும்படிக்கு வழிகாட்டினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் மாறாத தேவன். குழப்பம் உங்கள் மனதைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள். அதற்குப் பதிலாய், தேவனை நோக்கிப் பாருங்கள். அவர் உங்கள் சிருஷ்டிகராயும் உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்தவராயும் இருப்பதால், அவர் எப்பொழுதும் உங்கள் வாழ்வில் சரியானதைச் செய்கிறார். உங்களுக்கு எது சிறந்தது என்பதையும், அதற்குரிய குறித்த நேரத்தையும் அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் அவரை நம்பவும் அவருடைய வழிகளை ஏற்றுக்கொள்ளவும் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் நடக்க வேண்டிய நல் வழியை எனக்குக் காட்டும். நான் உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன். ஆமென்.