வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். லேவியராகமம் 26:4 தேவன் அதனதன் பருவ காலத்தில் மழையை உற்பத்தி செய்யும் இயற்கை சுழற்சியை உருவாக்கியுள்ளார். பயிர்கள் வளரவும், மரங்கள் காய் காய்க்கவும் மழை அவசியம். வறட்சியின் விளைவாய் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் வறுமையைப் பற்றி நாம் அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். ஆனால் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவதாய்த் தேவன் வாக்குப்பண்ணுகிறார். அதுபோலவே, நீங்கள் வாழ்க்கையில் வறட்சியைச் சந்தித்தால், பரிசுத்த ஆவியானவரை மழையாய் அனுப்புவதன் மூலம் உங்கள் வறண்ட பகுதிகளைத் தேவன் புத்துயிர் பெறச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் உங்கள் வாழ்வைப் பரிபூரண ஆசீர்வாதங்களின் வாழ்வாய் மாற்றுவார். நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறுவீர்கள். இவ்வுலகிலும் உங்கள் வாழ்விலும் பருவ மழைகளுக்காய் அவரிடம் விண்ணப்பம் பண்ணுங்கள். ஜெபம்: ஆண்டவரே, இயற்கையை குறித்து பொறுப்பாய் இருக்க எனக்கு உதவி செய்யும். எங்கள் நிலங்களை சரிப்படுத்தி, உரிய நேரத்தில் மழையைப் பெய்யப்பண்ணி, வயல்களையும் விருட்சங்களையும் ஆசீர்வதித்து அவைகள் கனிகொடுக்கச் செய்யும். என் ஜீவியத்தில் ஆவியின் மழையை அனுப்பி, என் வறண்ட வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்.
தேவன் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவார்
“வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். லேவியராகமம் 26:4 தேவன் அதனதன் பருவ காலத்தில் மழையை உற்பத்தி செய்யும் இயற்கை சுழற்சியை உருவாக்கியுள்ளார். பயிர்கள் வளரவும், மரங்கள் காய் காய்க்கவும் மழை அவசியம். வறட்சியின் விளைவாய் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் வறுமையைப் பற்றி நாம் அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். ஆனால் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவதாய்த் தேவன் வாக்குப்பண்ணுகிறார். அதுபோலவே, நீங்கள் வாழ்க்கையில் வறட்சியைச் சந்தித்தால், பரிசுத்த ஆவியானவரை மழையாய் அனுப்புவதன் மூலம் உங்கள் வறண்ட பகுதிகளைத் தேவன் புத்துயிர் பெறச் செய்வார். பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவர் உங்கள் வாழ்வைப் பரிபூரண ஆசீர்வாதங்களின் வாழ்வாய் மாற்றுவார். நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாய் மாறுவீர்கள். இவ்வுலகிலும் உங்கள் வாழ்விலும் பருவ மழைகளுக்காய் அவரிடம் விண்ணப்பம் பண்ணுங்கள். ஜெபம்: ஆண்டவரே, இயற்கையை குறித்து பொறுப்பாய் இருக்க எனக்கு உதவி செய்யும். எங்கள் நிலங்களை சரிப்படுத்தி, உரிய நேரத்தில் மழையைப் பெய்யப்பண்ணி, வயல்களையும் விருட்சங்களையும் ஆசீர்வதித்து அவைகள் கனிகொடுக்கச் செய்யும். என் ஜீவியத்தில் ஆவியின் மழையை அனுப்பி, என் வறண்ட வாழ்வைப் புதுப்பித்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

