திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1 பண்டைய கால மக்கள் தங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையினால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. தேவனின் திவ்ய வார்த்தைகளினால் பிரபஞ்சம் உருவானது என்பதையும் காணக்கூடாத உலகத்திலிருந்து, புலப்படும் உலகம் தோன்றியது என்பதையும் விசுவாசத்தினால் நாம் புரிந்துகொள்கிறோம். விசுவாசமானது, நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் விஷயங்களில் உறுதியாயிருப்பதாகும். விசுவாசம் இல்லாமல், தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது. உண்மையான விசுவாசமானது ஒரு திசைகாட்டியாய்ச் செயல்பட்டு, வாழ்வில் சரியான பாதையில் நம்மை நடத்துகிறது; அது இல்லைய்யென்றால், நாம் அழிவுக்கு ஆளாகிறோம். தேவனுடைய வார்த்தையில் நம்முடைய விசுவாசம் உறுதியாயிருக்க வேண்டும். நமது விசுவாசத்தை ஆராய்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்யச் சிறிது நேரம் ஒதுக்குவோம். உங்களுக்கு விசுவாசம் இல்லாவிட்டால், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு விசுவாசத்தைப் பரிசாய்த் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சந்தேகமும், மாறுபாடும் இல்லலாமல் விசுவாசத்தில் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்.
விசுவாசம் என்பது நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதில் உறுதியுடன்...
“திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரெயர் 11:1 பண்டைய கால மக்கள் தங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையினால் தேவனின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. தேவனின் திவ்ய வார்த்தைகளினால் பிரபஞ்சம் உருவானது என்பதையும் காணக்கூடாத உலகத்திலிருந்து, புலப்படும் உலகம் தோன்றியது என்பதையும் விசுவாசத்தினால் நாம் புரிந்துகொள்கிறோம். விசுவாசமானது, நாம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் விஷயங்களில் உறுதியாயிருப்பதாகும். விசுவாசம் இல்லாமல், தேவனுக்குப் பிரியமாயிருக்க முடியாது. உண்மையான விசுவாசமானது ஒரு திசைகாட்டியாய்ச் செயல்பட்டு, வாழ்வில் சரியான பாதையில் நம்மை நடத்துகிறது; அது இல்லைய்யென்றால், நாம் அழிவுக்கு ஆளாகிறோம். தேவனுடைய வார்த்தையில் நம்முடைய விசுவாசம் உறுதியாயிருக்க வேண்டும். நமது விசுவாசத்தை ஆராய்ந்து, தேவையான மாற்றங்களைச் செய்யச் சிறிது நேரம் ஒதுக்குவோம். உங்களுக்கு விசுவாசம் இல்லாவிட்டால், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு விசுவாசத்தைப் பரிசாய்த் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சந்தேகமும், மாறுபாடும் இல்லலாமல் விசுவாசத்தில் வளர எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

