← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய சிறகுகளின் நிழலில் களிகூருங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தேவனுடைய சிறகுகளின் நிழலில் களிகூருங்கள்.

“செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.சங்கீதம் 63:7 மனதில் சஞ்சலம் இல்லாத போது துதித்துப் பாடுவது என்பது எளிது . குறிப்பாக, நீங்கள் கவலைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாயிருக்கும்போதும், யாராவது உங்களுக்காக எல்லாவற்றையும் நிர்வகிக்கும்படி இருந்து, வாழ்க்கையை அனுபவிக்கச் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கும்போதும் அப்படி துதித்துப் பாடுவது சாத்தியமாயிருக்கிறது. ஆனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பயம் போன்ற சூழ்நிலைகள் காரணமாக துதித்துப் பாடுவது மக்கள் வாழ்வில் அரிதாகி வருகின்றன. அதனால்தான் இயேசுவிடம் திரும்புவதும், நமக்குத் தேவையான அனைத்திற்கும் அவரை நம்புவதும் முக்கியம். மிகவும் சவாலான நேரங்களிலும், நம்மைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அவர் எப்பொழுதும் தயாராயிருக்கிறார். அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி விசுவாச வாழ்க்கையை வாழ்வதன் மூலம், அவருடைய பிரசன்னத்தில் இருப்பதன் உண்மையான விடுதலையையும் மகிழ்ச்சியையும் நாம் அனுபவிக்க முடியும். நம் கவலைகள் அனைத்தையும் அவர் மீது வைத்து, அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்று உறுதியாக நம்பி. அவருடைய சிறகுகளின் நிழலில் நாம் களிகூறலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாரங்கள் அனைத்தையும் உம்மீது வைத்து, உம்மில் களிகூற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.சங்கீதம் 63:7 மனதில் சஞ்சலம் இல்லாத போது துதித்துப் பாடுவது என்பது எளிது . குறிப்பாக, நீங்கள் கவலைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாயிருக்கும்போதும், யாராவது உங்களுக்காக எல்லாவற்றையும் நிர்வகிக்கும்படி இருந்து, வாழ்க்கையை அனுபவிக்கச் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்கும்போதும் அப்படி துதித்துப் பாடுவது சாத்தியமாயிருக்கிறது. ஆனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பயம் போன்ற சூழ்நிலைகள் காரணமாக துதித்துப் பாடுவது மக்கள் வாழ்வில் அரிதாகி வருகின்றன. அதனால்தான் இயேசுவிடம் திரும்புவதும், நமக்குத் தேவையான அனைத்திற்கும் அவரை நம்புவதும் முக்கியம். மிகவும் சவாலான நேரங்களிலும், நம்மைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அவர் எப்பொழுதும் தயாராயிருக்கிறார். அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி விசுவாச வாழ்க்கையை வாழ்வதன் மூலம், அவருடைய பிரசன்னத்தில் இருப்பதன் உண்மையான விடுதலையையும் மகிழ்ச்சியையும் நாம் அனுபவிக்க முடியும். நம் கவலைகள் அனைத்தையும் அவர் மீது வைத்து, அவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்று உறுதியாக நம்பி. அவருடைய சிறகுகளின் நிழலில் நாம் களிகூறலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் பாரங்கள் அனைத்தையும் உம்மீது வைத்து, உம்மில் களிகூற எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.