சனிக்கிழமை, 9 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். சங்கீதம் 4:1 மன அழுத்தம் கொடிய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவான அனுபவமாகும். இதன் விளைவாக, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும் சிகிச்சைகளும் உலகளாவிய வர்த்தகமாய் மாறியுள்ளன. மக்கள் தங்கள் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் போக்கப் பல்வேறு வழிகளைத் தேடுகிறார்கள். இருப்பினும், கிறிஸ்து இயேசுவில் ஒரு எளிய பதில் உள்ளது. அதற்கு எந்தப் பணமும் தேவையில்லை. “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” என்று வேதம் கூறுகிறது. இது, நமக்குத் தேவையான இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தரக்கூடிய தேவனிடம், நமது கவலைகள், பயங்கள் மற்றும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நாம் ஒப்படைக்க முடியும் என்பதைக் காண்பிக்கிறது. நாம் நம் இருதயங்களை அவரிடம் ஊற்றும்போது, அவருடைய அன்பையும், இரக்கத்தையும், அக்கறையையும் நாம் அனுபவிக்கிறோம். நமது மன அழுத்தத்தையும் கவலையையும் குறைக்கும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். இயேசுவோடு நேரத்தைச் செலவிடுவதும், அவரில் நம்பிக்கை வைப்பதும் மிகத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். அவர் உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து உங்களுக்குச் சமாதானம் தருவார். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தயவுசெய்து என் மன அழுத்தத்தை நீக்கி, உமது சமாதானத்தால் என்னை நிரப்பும். ஆமென்.
உங்கள் நெருக்கத்தினின்று உங்களைத் தேவன் விடுவிப்பார்.
“சனிக்கிழமை, 9 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். சங்கீதம் 4:1 மன அழுத்தம் கொடிய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது அனைவரின் வாழ்க்கையிலும் பொதுவான அனுபவமாகும். இதன் விளைவாக, மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளும் சிகிச்சைகளும் உலகளாவிய வர்த்தகமாய் மாறியுள்ளன. மக்கள் தங்கள் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் போக்கப் பல்வேறு வழிகளைத் தேடுகிறார்கள். இருப்பினும், கிறிஸ்து இயேசுவில் ஒரு எளிய பதில் உள்ளது. அதற்கு எந்தப் பணமும் தேவையில்லை. "கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்" என்று வேதம் கூறுகிறது. இது, நமக்குத் தேவையான இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் தரக்கூடிய தேவனிடம், நமது கவலைகள், பயங்கள் மற்றும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் நாம் ஒப்படைக்க முடியும் என்பதைக் காண்பிக்கிறது. நாம் நம் இருதயங்களை அவரிடம் ஊற்றும்போது, அவருடைய அன்பையும், இரக்கத்தையும், அக்கறையையும் நாம் அனுபவிக்கிறோம். நமது மன அழுத்தத்தையும் கவலையையும் குறைக்கும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். இயேசுவோடு நேரத்தைச் செலவிடுவதும், அவரில் நம்பிக்கை வைப்பதும் மிகத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். அவர் உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து உங்களுக்குச் சமாதானம் தருவார். ஜெபம்: அன்புள்ள ஆண்டவராகிய இயேசுவே, தயவுசெய்து என் மன அழுத்தத்தை நீக்கி, உமது சமாதானத்தால் என்னை நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

