சனிக்கிழமை, 6 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. நீதிமொழிகள் 4:26 “சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.“ஆம்! அறிவே ஆற்றல்”என்று பிரசித்திபெற்ற பழமொழியொன்றும் கூறுகிறது. வாழ்க்கையின் உண்மையும் சத்தியமும் உங்களுக்குப் புரிகிறதா? “நானே சத்தியம்” என்றும், “என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடக்கமாட்டான்” என்றும் இயேசு கூறினார். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது இன்றியமையாததாகும். அவருடைய போதனைகளில் நிலைத்திருங்கள். ஒரு கணம்கூட நீங்கள் பின்வாங்க இடம் கொடுக்காதிருங்கள், இருளை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்காதிருங்கள். அப்பொழுது, உங்கள் முன்னோக்கிய பயணம் பாதுகாப்பாகவும், சுமுகமாகவும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்முடைய போதனைகளை விட்டு வழிவிலகாமல் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.
சத்தியத்தின் பாதையில் நிலைத்திருங்கள்.
“சனிக்கிழமை, 6 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. நீதிமொழிகள் 4:26 "சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்"என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது."ஆம்! அறிவே ஆற்றல்"என்று பிரசித்திபெற்ற பழமொழியொன்றும் கூறுகிறது. வாழ்க்கையின் உண்மையும் சத்தியமும் உங்களுக்குப் புரிகிறதா? "நானே சத்தியம்" என்றும், "என்னைப் பின்பற்றுகிறவன் இருளில் நடக்கமாட்டான்" என்றும் இயேசு கூறினார். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவது இன்றியமையாததாகும். அவருடைய போதனைகளில் நிலைத்திருங்கள். ஒரு கணம்கூட நீங்கள் பின்வாங்க இடம் கொடுக்காதிருங்கள், இருளை நோக்கி அழைத்துச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்காதிருங்கள். அப்பொழுது, உங்கள் முன்னோக்கிய பயணம் பாதுகாப்பாகவும், சுமுகமாகவும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து உம்முடைய போதனைகளை விட்டு வழிவிலகாமல் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

