ஞாயிறு, 1 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்.1 இராஜாக்கள் 19:7 அன்பு தேவ பிள்ளையே, * இவ்வுலக வாழ்க்கை என்பது நித்தியத்தை நோக்கிய நெடிய பயணம் ஆகும்.* உங்களின் தற்போதைய சூழ்நிலையால் நீங்கள் அமிழ்ந்து போய் இருக்கிறீர்களா?* வாழ்க்கையின் சவால்கள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விரைவாய்த் தப்பிக்க விரும்புகிறீர்களா? * நம்பிக்கை இழக்காதீர்கள்.* தேவன் தம்முடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும் நம் ஆத்துமாவிற்கும் ஆவிக்கும் ஊட்டமளிக்கும் ஓர் உணவை நமக்களித்துள்ளார்.* அவருடைய வார்த்தையே ஜீவன். அது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிக முக்கியமானதோர் உணவாகும். * நீங்கள் அவருடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் தவறாமல் உட்கொள்ளுகிறீர்களா?* இல்லையெனில், அதை அனுதின நடைமுறையாக்கும்படி உறுதிகொண்டு, அவருடைய அபிஷேகத்தின் புதுபெலனை அனுபவித்து, மேலான காரியங்களைச் செய்து நீங்கள், இயேசு கிறிஸ்துவுக்கு வெற்றிகரமான சாட்சியாய் மாறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த ஆவிக்குரிய உணவிற்கு நன்றி செலுத்துகிறேன். தினமும் அதை உட்கொண்டு, வல்லமையாய் வளர என்னைப் பலப்படுத்தும். ஆமென்.
உங்களை பலப்படுத்தத் தேவன் உணவளிக்கிறார்
“ஞாயிறு, 1 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்.1 இராஜாக்கள் 19:7 அன்பு தேவ பிள்ளையே, * இவ்வுலக வாழ்க்கை என்பது நித்தியத்தை நோக்கிய நெடிய பயணம் ஆகும்.* உங்களின் தற்போதைய சூழ்நிலையால் நீங்கள் அமிழ்ந்து போய் இருக்கிறீர்களா?* வாழ்க்கையின் சவால்கள் மற்றும் கஷ்டங்களில் இருந்து விரைவாய்த் தப்பிக்க விரும்புகிறீர்களா? * நம்பிக்கை இழக்காதீர்கள்.* தேவன் தம்முடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியினாலும் நம் ஆத்துமாவிற்கும் ஆவிக்கும் ஊட்டமளிக்கும் ஓர் உணவை நமக்களித்துள்ளார்.* அவருடைய வார்த்தையே ஜீவன். அது உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மிக முக்கியமானதோர் உணவாகும். * நீங்கள் அவருடைய வார்த்தையை ஒவ்வொரு நாளும் தவறாமல் உட்கொள்ளுகிறீர்களா?* இல்லையெனில், அதை அனுதின நடைமுறையாக்கும்படி உறுதிகொண்டு, அவருடைய அபிஷேகத்தின் புதுபெலனை அனுபவித்து, மேலான காரியங்களைச் செய்து நீங்கள், இயேசு கிறிஸ்துவுக்கு வெற்றிகரமான சாட்சியாய் மாறுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்த ஆவிக்குரிய உணவிற்கு நன்றி செலுத்துகிறேன். தினமும் அதை உட்கொண்டு, வல்லமையாய் வளர என்னைப் பலப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

