சனிக்கிழமை, 30 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். மல்கியா 4:2 உங்கள் வேலையிலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் தவறாய் நடத்தப்படுகிறீர்களா? நெறிமுறையற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு நீங்கள் இணங்க மறுப்பதால் பாதிக்கப்படுகிறீர்களா? மன அழுத்தத்தமும், பயமும் உங்களை ஆட்கொள்வதற்கு அனுமதிக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு உடைந்திருந்தாலும் அல்லது காயப்பட்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவிடம் ஆரோக்கியம் பெற்றுக்கொள்ள முடியும் . அவர் உங்களுக்கு உன்னதப் பரிகாரியாய் இருக்கிறார். அவரை அணுகி உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள். உலகத்திற்குச் சூரியனானது வெப்பம், வெளிச்சம் மற்றும் ஜீவனைத் தருவது போல், தேவ குமாரன் தெய்வீக நீதியுடன் உங்கள்மேல் பிரகாசிக்கிறார். காயமடைந்த உங்கள் ஆத்துமாவை அவரால் குணப்படுத்த முடியும். அவருடைய செட்டைகள் , அவருடைய அன்பின் சகலவிதப் பண்பையும் உள்ளடக்கிய அரவணைப்பைக் குறிக்கிறது. இது உங்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறது. அவர் உங்கள் நீதியாயிருந்து, நீங்கள் மதிப்புமிக்க வாழ்க்கை வாழ உதவி செய்வார். திடன் கொண்டு தைரியமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என் காயங்களை ஆற்றி, உமது நீதியை என்மீது பிரகாசிக்கச் செய்யும். ஆமென்.
நீதியின் சூரியன் உங்கள்மேல் உதிக்கும்.
“சனிக்கிழமை, 30 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். மல்கியா 4:2 உங்கள் வேலையிலோ அல்லது சமுதாயத்திலோ நீங்கள் தவறாய் நடத்தப்படுகிறீர்களா? நெறிமுறையற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு நீங்கள் இணங்க மறுப்பதால் பாதிக்கப்படுகிறீர்களா? மன அழுத்தத்தமும், பயமும் உங்களை ஆட்கொள்வதற்கு அனுமதிக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு உடைந்திருந்தாலும் அல்லது காயப்பட்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவிடம் ஆரோக்கியம் பெற்றுக்கொள்ள முடியும் . அவர் உங்களுக்கு உன்னதப் பரிகாரியாய் இருக்கிறார். அவரை அணுகி உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள். உலகத்திற்குச் சூரியனானது வெப்பம், வெளிச்சம் மற்றும் ஜீவனைத் தருவது போல், தேவ குமாரன் தெய்வீக நீதியுடன் உங்கள்மேல் பிரகாசிக்கிறார். காயமடைந்த உங்கள் ஆத்துமாவை அவரால் குணப்படுத்த முடியும். அவருடைய செட்டைகள் , அவருடைய அன்பின் சகலவிதப் பண்பையும் உள்ளடக்கிய அரவணைப்பைக் குறிக்கிறது. இது உங்களுக்கு ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறது. அவர் உங்கள் நீதியாயிருந்து, நீங்கள் மதிப்புமிக்க வாழ்க்கை வாழ உதவி செய்வார். திடன் கொண்டு தைரியமாயிருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் உடைந்த வாழ்க்கையை உம்மிடம் ஒப்படைக்கிறேன். தயவுகூர்ந்து என் காயங்களை ஆற்றி, உமது நீதியை என்மீது பிரகாசிக்கச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

