திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர். சங்கீதம் 16:5 * குடும்பச் சொத்தில் உங்களுக்கு உரிய சுதந்தரம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்களா?* உங்கள் உடன்பிறந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், அவர்களின் செயல்களுக்கு நியாயமற்ற காரணங்களைச் சொல்லுகிறார்கள் என்றும் வருத்தப்படுகிறீர்களா? * அந்த மனவேதனைகளை விட்டுவிட்டுத் தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்.* நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது நீதியான செயல்கள் மட்டுமே உங்களுக்கு ஆதரவாய் எண்ணப்படும்.* எனவே, உலகச் சொத்துக்களின்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்.* மாறாக, தேவனுக்கும் அவருடைய சித்தத்துக்கும் உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை கொடுங்கள். * அவரே உங்கள் பங்கும் இரட்சிப்புமானவர். உலகில் வேறு எதையும் அவரோடு ஒப்பிட முடியாது. விசுவாசமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சிப்பும், பங்குமாய் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
கர்த்தர் உங்கள் பங்கு
“திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர். சங்கீதம் 16:5 * குடும்பச் சொத்தில் உங்களுக்கு உரிய சுதந்தரம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருக்கிறீர்களா?* உங்கள் உடன்பிறந்தவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், அவர்களின் செயல்களுக்கு நியாயமற்ற காரணங்களைச் சொல்லுகிறார்கள் என்றும் வருத்தப்படுகிறீர்களா? * அந்த மனவேதனைகளை விட்டுவிட்டுத் தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள்.* நீங்கள் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது நீதியான செயல்கள் மட்டுமே உங்களுக்கு ஆதரவாய் எண்ணப்படும்.* எனவே, உலகச் சொத்துக்களின்மேல் நம்பிக்கை வைக்காதீர்கள்.* மாறாக, தேவனுக்கும் அவருடைய சித்தத்துக்கும் உங்கள் வாழ்க்கையில் முன்னுரிமை கொடுங்கள். * அவரே உங்கள் பங்கும் இரட்சிப்புமானவர். உலகில் வேறு எதையும் அவரோடு ஒப்பிட முடியாது. விசுவாசமாய் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சிப்பும், பங்குமாய் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறேன். இந்த ஆசீர்வாதத்தைத் தொடர்ந்து அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

