← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் அநாதி சிநேகத்தால் உங்களைச் சிநேகித்தார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் அநாதி சிநேகத்தால் உங்களைச் சிநேகித்தார்

“செவ்வாய், 24 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். எரேமியா 31:3 நீங்கள் ஒரு காலத்தில் நம்பியவர்களின் மேலோட்டமான அன்பினால் ஏமாற்றமடைகிறீர்களா? மனிதர்களாய், நாம் சந்திக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வேறுபட்ட வரம்புகள் அனைவருக்கும் உள்ளன. ஆனால், தேவனைப் பொறுத்தவரை, அவருடைய அன்பு நிலையானதும், ஆழமானதும் சக்தி வாய்ந்ததுமாகும். தேவனின் அன்பு தனித்துவமானதும், மனித அன்புடன் ஒப்பிட முடியாததுமாகும். இது அளவிட முடியாதது. ஒருபொழுதும் தோல்வியடையாது. அவர் உங்களை அளவற்ற அன்புடன் தம்மிடம் இழுத்துள்ளார். மேலும் உங்கள் பாதுகாப்பு, உங்கள் சொந்தத் தகுதிகளாலும் பலத்தினாலும் அல்ல, அவரது இரக்கத்தினாலும் அன்பினாலுமே கிடைக்கிறது. நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகு முன்னமே அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். மேலும் நீங்கள் அவருக்கு விசேஷித்தோரும் விலைமதிப்பற்றவருமாய் இருக்கிறீர்கள். அவரது அசைக்க முடியா அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இப்பொழுது திடன் கொள்ளுங்கள் - வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவிற்கு அவர் உங்களை அதிகமாய்ச் சிநேகிக்கிறார். அவருடன் நெருக்கமாய் இருந்து அவரது அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பிற்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். உமது அன்பில் இளைப்பாற எனக்கு அருள் புரிவீராக. ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 24 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன். எரேமியா 31:3 நீங்கள் ஒரு காலத்தில் நம்பியவர்களின் மேலோட்டமான அன்பினால் ஏமாற்றமடைகிறீர்களா? மனிதர்களாய், நாம் சந்திக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில் வேறுபட்ட வரம்புகள் அனைவருக்கும் உள்ளன. ஆனால், தேவனைப் பொறுத்தவரை, அவருடைய அன்பு நிலையானதும், ஆழமானதும் சக்தி வாய்ந்ததுமாகும். தேவனின் அன்பு தனித்துவமானதும், மனித அன்புடன் ஒப்பிட முடியாததுமாகும். இது அளவிட முடியாதது. ஒருபொழுதும் தோல்வியடையாது. அவர் உங்களை அளவற்ற அன்புடன் தம்மிடம் இழுத்துள்ளார். மேலும் உங்கள் பாதுகாப்பு, உங்கள் சொந்தத் தகுதிகளாலும் பலத்தினாலும் அல்ல, அவரது இரக்கத்தினாலும் அன்பினாலுமே கிடைக்கிறது. நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் உருவாகு முன்னமே அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். மேலும் நீங்கள் அவருக்கு விசேஷித்தோரும் விலைமதிப்பற்றவருமாய் இருக்கிறீர்கள். அவரது அசைக்க முடியா அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இப்பொழுது திடன் கொள்ளுங்கள் - வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத அளவிற்கு அவர் உங்களை அதிகமாய்ச் சிநேகிக்கிறார். அவருடன் நெருக்கமாய் இருந்து அவரது அன்பைப் பற்றிக்கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பிற்கு மிகுந்த நன்றி செலுத்துகிறேன். உமது அன்பில் இளைப்பாற எனக்கு அருள் புரிவீராக. ஆமென்.