← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களை கைவிடமாட்டார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களை கைவிடமாட்டார்

“ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை.சங்கீதம் 9:10 *நம்முடைய தேவன் தம்முடைய அன்பில் உறுதியானவர், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர்.* அவர் ஒருபொழுதும் மாறுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். * ஆனால் உங்கள் விசுவாசம் எப்படி காணப்படுகிறது?* தேவன் மீதான உங்கள் அன்பிலும் அவர்மீதுள்ள நம்பிக்கையிலும் நீங்கள் எவ்வளவு நிலையாகவும் விடாமுயற்சியான உறுதியுடனும் இருக்கிறீர்கள்?* உங்கள் விசுவாசம், உங்கள் உணர்வுகளையும் நீங்கள் காண்பதையும் சார்ந்திருக்கிறதா? அல்லது தேவனின் எழுதப்பட்ட வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டதா? * சிலுவையில் இயேசுவின் தியாகத்தை நினைவுகூருங்கள்.* அவர் உங்கள்மேல் கொண்ட நிபந்தனையற்ற அன்பிற்குப் பிரதியுத்தரமாய் அவருக்கு உண்மையுள்ளோராய் இருங்கள். *அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை.* தற்போதைய சூழ்நிலைகளில் நீங்கள் தனிமையில் இருப்பது போல் தோன்றினாலும், தேவன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்படுகிற நேரத்திலெல்லாம் அவர் உங்களுக்காக இருப்பார்.* திடன்கொண்டு விசுவாசத்தில் நடவுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு உண்மையாயிருக்கவும் உமது அன்பின் செயல்களையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 17 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை.சங்கீதம் 9:10 நம்முடைய தேவன் தம்முடைய அன்பில் உறுதியானவர், தம்முடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர். அவர் ஒருபொழுதும் மாறுவதில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். * ஆனால் உங்கள் விசுவாசம் எப்படி காணப்படுகிறது?* தேவன் மீதான உங்கள் அன்பிலும் அவர்மீதுள்ள நம்பிக்கையிலும் நீங்கள் எவ்வளவு நிலையாகவும் விடாமுயற்சியான உறுதியுடனும் இருக்கிறீர்கள்?* உங்கள் விசுவாசம், உங்கள் உணர்வுகளையும் நீங்கள் காண்பதையும் சார்ந்திருக்கிறதா? அல்லது தேவனின் எழுதப்பட்ட வாக்குத்தத்தங்களை அடிப்படையாகக் கொண்டதா? * சிலுவையில் இயேசுவின் தியாகத்தை நினைவுகூருங்கள்.* அவர் உங்கள்மேல் கொண்ட நிபந்தனையற்ற அன்பிற்குப் பிரதியுத்தரமாய் அவருக்கு உண்மையுள்ளோராய் இருங்கள். அவர் உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. தற்போதைய சூழ்நிலைகளில் நீங்கள் தனிமையில் இருப்பது போல் தோன்றினாலும், தேவன் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார். தேவைப்படுகிற நேரத்திலெல்லாம் அவர் உங்களுக்காக இருப்பார்.* திடன்கொண்டு விசுவாசத்தில் நடவுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமக்கு உண்மையாயிருக்கவும் உமது அன்பின் செயல்களையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.