வியாழன், 11 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.சங்கீதம் 18:34 இயேசு கூறியது போல் வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். பிரச்சனைகளற்ற வாழ்வை அவர் ஒருபொழுதும் வாக்குப்பண்ணவில்லை. ஆனால், வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தேவையான பலம், வழிகாட்டுதல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை நமக்கு தருவதாய் அவர் உறுதியளித்திருக்கிறார். அவர் நம் புயங்களை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், போரில் நம்மை வழிநடத்தவும் செய்வார். நம்முடைய தளபதியாய் அவர், நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்வார். எனவே நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் அவரை நம்பி அவருடைய கட்டளைகளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படியுங்கள். நீங்கள் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் உங்களைப் பார்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, போருக்கு என் கைகளைப் பயிற்றுவித்ததற்கும், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் காட்டும் உமது கிருபையின் வழிகாட்டுதலுக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
தேவன் உங்கள் கைகளைப் போருக்குப் பழக்குவித்துப் புயங்களைப்...
“வியாழன், 11 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.சங்கீதம் 18:34 இயேசு கூறியது போல் வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். பிரச்சனைகளற்ற வாழ்வை அவர் ஒருபொழுதும் வாக்குப்பண்ணவில்லை. ஆனால், வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தேவையான பலம், வழிகாட்டுதல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை நமக்கு தருவதாய் அவர் உறுதியளித்திருக்கிறார். அவர் நம் புயங்களை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், போரில் நம்மை வழிநடத்தவும் செய்வார். நம்முடைய தளபதியாய் அவர், நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்வார். எனவே நீங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் அவரை நம்பி அவருடைய கட்டளைகளுக்கு உண்மையாய்க் கீழ்ப்படியுங்கள். நீங்கள் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் உங்களைப் பார்ப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, போருக்கு என் கைகளைப் பயிற்றுவித்ததற்கும், வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் காட்டும் உமது கிருபையின் வழிகாட்டுதலுக்கும் நன்றி செலுத்துகிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

