ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.எரேமியா 31:13 உங்கள் குடும்பம், சுற்றுப்புறம் அல்லது பணியிடத்தில் ஏற்படும் வேதனையான நிகழ்வுகளால் துயரத்தில் காணப்படுகிறீர்களா? துயரம் என்பது இழப்பினால் ஏற்படக்கூடியதாகும். ஆனால் தேவ திட்டம் மற்றும் நோக்கத்தின்படி வாழ உங்களுக்கு எதிர்காலமும் வாழ்க்கையும் உள்ளதென்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும். இழப்பு அல்லது தோல்விக்குப் பின் முன்னேறுவது சவாலானதாய் இருந்தாலும், இயேசுவைச் சார்ந்திருப்பது உங்களுக்குத் தேவையான பலத்தைத் தரும். அவர் உங்களை வழிநடத்தி உங்கள் முன் வைத்த பாதையில் நடத்திச்செல்வார். தம்மில் அன்புகூறுவர்களுக்குச் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாகச் செய்கிறார் என்பதை அறிந்து, அவருடைய எல்லையற்ற ஞானத்தையும், நேசத்தையும் நம்புங்கள். அவர்மேல் சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றி, அவருடைய திட்டத்தை நிறைவேற்ற உங்களுக்கு பலத்தைக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றும். ஆமென்.
தேவன் உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றுவார்.
“ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.எரேமியா 31:13 உங்கள் குடும்பம், சுற்றுப்புறம் அல்லது பணியிடத்தில் ஏற்படும் வேதனையான நிகழ்வுகளால் துயரத்தில் காணப்படுகிறீர்களா? துயரம் என்பது இழப்பினால் ஏற்படக்கூடியதாகும். ஆனால் தேவ திட்டம் மற்றும் நோக்கத்தின்படி வாழ உங்களுக்கு எதிர்காலமும் வாழ்க்கையும் உள்ளதென்பதை நீங்கள் நினைவிற்கொள்ள வேண்டும். இழப்பு அல்லது தோல்விக்குப் பின் முன்னேறுவது சவாலானதாய் இருந்தாலும், இயேசுவைச் சார்ந்திருப்பது உங்களுக்குத் தேவையான பலத்தைத் தரும். அவர் உங்களை வழிநடத்தி உங்கள் முன் வைத்த பாதையில் நடத்திச்செல்வார். தம்மில் அன்புகூறுவர்களுக்குச் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாகச் செய்கிறார் என்பதை அறிந்து, அவருடைய எல்லையற்ற ஞானத்தையும், நேசத்தையும் நம்புங்கள். அவர்மேல் சார்ந்து கொள்ளுங்கள். அவர் உங்கள் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றி, அவருடைய திட்டத்தை நிறைவேற்ற உங்களுக்கு பலத்தைக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் துக்கத்தைச் சந்தோஷமாய் மாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

