புதன், 17 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன். ஏசாயா 44:3 உங்கள் வாழ்க்கையில் ஒரு வறட்சியான காலகட்டத்தைக் கடந்து செல்லுகிறீர்களா? உங்கள் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உணருகிறீர்களா? தேவன் சில சமயங்களில் தமது பிள்ளைகளின் வாழ்வில் இத்தகைய வறட்சியான காலங்களை அனுமதிக்கிறார். இருப்பினும், அவர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்கள் பலத்திற்கு மிஞ்சினதை தடுத்துப் போடுகிறார் . மனம் தளராதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் காட்டிலும் நம்பிக்கையால் உங்கள் செயல்கள் நடத்தப்படட்டும். அவருடன் தொடர்ந்து நேரத்தைச் செலவிட்டு உங்கள் கவலைகளை அவரிடம் ஒப்படையுங்கள். அவரை அதிகமாய்த் தேடி, அவருடைய பிரசன்னத்தின்மேல் தாகமாயிருங்கள். உங்கள் வறண்ட வாழ்க்கையை அவர்தம் நிரம்பி வழியும் பிரசன்னத்தால் நிரப்புகிறதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். இது அற்புதமானதும் ஆச்சரியமான ஒன்றாகவும் இருக்கும். ஜெபம்: ஆண்டவரே, தாகமுள்ள என் ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவதற்கான உம்முடைய வாக்குத்தத்தத்திற்கு நன்றிசெலுத்துகிறேன். ஆமென்.
தேவன் உங்கள் தாகத்தைத் தீர்த்திடுவார்.
“புதன், 17 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன். ஏசாயா 44:3 உங்கள் வாழ்க்கையில் ஒரு வறட்சியான காலகட்டத்தைக் கடந்து செல்லுகிறீர்களா? உங்கள் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உணருகிறீர்களா? தேவன் சில சமயங்களில் தமது பிள்ளைகளின் வாழ்வில் இத்தகைய வறட்சியான காலங்களை அனுமதிக்கிறார். இருப்பினும், அவர் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்கள் பலத்திற்கு மிஞ்சினதை தடுத்துப் போடுகிறார் . மனம் தளராதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் காட்டிலும் நம்பிக்கையால் உங்கள் செயல்கள் நடத்தப்படட்டும். அவருடன் தொடர்ந்து நேரத்தைச் செலவிட்டு உங்கள் கவலைகளை அவரிடம் ஒப்படையுங்கள். அவரை அதிகமாய்த் தேடி, அவருடைய பிரசன்னத்தின்மேல் தாகமாயிருங்கள். உங்கள் வறண்ட வாழ்க்கையை அவர்தம் நிரம்பி வழியும் பிரசன்னத்தால் நிரப்புகிறதைப் பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். இது அற்புதமானதும் ஆச்சரியமான ஒன்றாகவும் இருக்கும். ஜெபம்: ஆண்டவரே, தாகமுள்ள என் ஆத்துமாவைத் திருப்திப்படுத்துவதற்கான உம்முடைய வாக்குத்தத்தத்திற்கு நன்றிசெலுத்துகிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

