இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 நம்பிக்கையற்ற சூழ்நிலையில் சிக்கிக் கொண்டதாய் உணருகிறீர்களா? உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதமான முன்னேற்றத்தை விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாயும், சவால் நிறைந்ததாயும் தோன்றினாலும், தேவன் வல்லமை உள்ளவரும் உங்களுக்கு ஓர் தீர்வை வழங்க வல்லவருமாய் இருக்கிறார். உங்கள் சூழ்நிலை நம்முடைய தேவனுக்கு சிக்கலானதல்ல. உங்கள் கவலைகள், விண்ணப்பங்கள் அனைத்தையும் அவர் பாதத்தில் வைத்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான விடுதலையை அவர் தருவார். குறித்த நேரத்தில் அவர் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். தேவனின் சமுகத்தில் மகிழ்ச்சியாயும் சமாதானமாயும் இருங்கள். அவர் அற்புதங்களின் தேவன். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் மகத்தான அற்புதங்களைச் செய்வீராக. ஆமென்.
தேவன் உங்களுக்கு மகத்தான அற்புதங்களைச் செய்வார்.
“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். மீகா 7:15 நம்பிக்கையற்ற சூழ்நிலையில் சிக்கிக் கொண்டதாய் உணருகிறீர்களா? உங்கள் ஆரோக்கியத்தில் அற்புதமான முன்னேற்றத்தை விரும்புகிறீர்களா? அல்லது உங்கள் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெற விரும்புகிறீர்களா? உங்கள் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாயும், சவால் நிறைந்ததாயும் தோன்றினாலும், தேவன் வல்லமை உள்ளவரும் உங்களுக்கு ஓர் தீர்வை வழங்க வல்லவருமாய் இருக்கிறார். உங்கள் சூழ்நிலை நம்முடைய தேவனுக்கு சிக்கலானதல்ல. உங்கள் கவலைகள், விண்ணப்பங்கள் அனைத்தையும் அவர் பாதத்தில் வைத்துவிடுங்கள். உங்களுக்குத் தேவையான விடுதலையை அவர் தருவார். குறித்த நேரத்தில் அவர் உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளிப்பார். தேவனின் சமுகத்தில் மகிழ்ச்சியாயும் சமாதானமாயும் இருங்கள். அவர் அற்புதங்களின் தேவன். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வில் மகத்தான அற்புதங்களைச் செய்வீராக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

