ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். ஏசாயா 12:2 நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? உங்களை விட வேறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கொண்டவர்களைச் சமாளிப்பதில் சிக்கல் உள்ளதா? சமூகத்தில் சுதந்திரமாய் நடமாட, நீங்கள் பயமுற்றவராகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சிகள் உங்கள் மனதுக்குள் ஆழமாய் பதிந்து, உங்களுக்குத் தீங்கு விளைவித்து, உங்கள் வாழ்க்கையை முழுமையாய் வாழவிடாமல் தடுத்து விடும். ஆனால், தேவனின் பிள்ளையாகிய நீங்கள், ஒருபொழுதும் தனியாக இல்லை என்பதையும், இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தெய்வீக பலத்தையும், தைரியத்தையும் எப்பொழுதும் உங்களால் அனுபவிக்க முடியும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் உணராவிட்டாலும், தேவன் எப்பொழுதும் உங்களைப் பார்த்துக் கொண்டு, உங்களைப் பாதுகாத்து வருகிறார். வாழ்க்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களில் உங்களை வழிநடத்த, அவரை நீங்கள் நம்புங்கள். பயம் என்பது தேவனிடமிருந்தல்ல, எதிரியிடமிருந்து வந்ததென்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, நீங்கள் பயத்தை உணர்ந்தால், ஆறுதலுக்காகவும் பலத்திற்காகவும் தேவனிடம் திரும்புங்கள். தேவனே உங்கள் இரட்சிப்பு. அவர் உங்களை ஜெயங்கொள்ளுகிறவராய் இருக்க அழைத்துள்ளார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சிப்பாக இருப்பதற்கு மிகுந்த நன்றி. தயவுகூர்ந்து ஜெயங்கொண்டவனா(ளா)யிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
தேவன் உங்கள் இரட்சிப்பு, பயப்படாதிருங்கள்.
“ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். ஏசாயா 12:2 நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? உங்களை விட வேறுபட்ட நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளைக் கொண்டவர்களைச் சமாளிப்பதில் சிக்கல் உள்ளதா? சமூகத்தில் சுதந்திரமாய் நடமாட, நீங்கள் பயமுற்றவராகவும் பாதுகாப்பற்றதாகவும் உணர்கிறீர்களா? இந்த உணர்ச்சிகள் உங்கள் மனதுக்குள் ஆழமாய் பதிந்து, உங்களுக்குத் தீங்கு விளைவித்து, உங்கள் வாழ்க்கையை முழுமையாய் வாழவிடாமல் தடுத்து விடும். ஆனால், தேவனின் பிள்ளையாகிய நீங்கள், ஒருபொழுதும் தனியாக இல்லை என்பதையும், இந்தச் சவால்களைச் சமாளிக்கத் தெய்வீக பலத்தையும், தைரியத்தையும் எப்பொழுதும் உங்களால் அனுபவிக்க முடியும் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் உணராவிட்டாலும், தேவன் எப்பொழுதும் உங்களைப் பார்த்துக் கொண்டு, உங்களைப் பாதுகாத்து வருகிறார். வாழ்க்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களில் உங்களை வழிநடத்த, அவரை நீங்கள் நம்புங்கள். பயம் என்பது தேவனிடமிருந்தல்ல, எதிரியிடமிருந்து வந்ததென்பதை நினைவில் கொள்வது அவசியம். எனவே, நீங்கள் பயத்தை உணர்ந்தால், ஆறுதலுக்காகவும் பலத்திற்காகவும் தேவனிடம் திரும்புங்கள். தேவனே உங்கள் இரட்சிப்பு. அவர் உங்களை ஜெயங்கொள்ளுகிறவராய் இருக்க அழைத்துள்ளார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் இரட்சிப்பாக இருப்பதற்கு மிகுந்த நன்றி. தயவுகூர்ந்து ஜெயங்கொண்டவனா(ளா)யிருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

