திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். சங்கீதம் 50:23 - உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எவ்வளவு மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள்?- நீங்கள் நிறைவாகவும், திருப்தியாகவும் உணருகிறீர்களா, அல்லது உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலாவது, குறையாக உணர்கிறீர்களா?- உங்கள் வாழ்வின் எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், கடைசியாக எப்பொழுது தேவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்? - எப்பொழுதும் தேவனுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.- தேவனுக்கு நன்றி செலுத்துவதும், நம் சிந்தையிலும் நடத்தையிலும் அவருக்கு நன்றியுள்ளோராயிருப்பதும் அவரை மகிமைப்படுத்தும் மெய்யான பலிகளாகும்.- உங்கள் ஐசுவரியத்திலும் பணத்திலும் அவர் பிரியமாயில்லை; மாறாக, நீங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு நன்றியுள்ளவர்களாகவும், கீழ்ப்படிதலுடனும் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். - அவருடைய வழியைப் பின்பற்றினால், அவர் உங்களை நித்திய இரட்சிப்பிற்குள் அழைத்துச் செல்வார். உங்களை ஆக்கினைக்கு உட்படுத்தமாட்டார்.- நீங்கள் பெற்றுக்கொண்ட எல்லா நன்மைகளையும் நினைத்து, அவற்றிற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.- இந்த நன்றியுணர்வின் செயல், தேவனுடனான உங்கள் உறவை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் நேர்மையானதும், நன்றியுள்ளதுமான மனப்பான்மையை வளர்க்கவும் உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் எனது நன்றியை பலியாகச் செலுத்துகிறேன். உமது நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
ஸ்தோத்திர பலியானது மெய்யாய்த் தேவனைக் மகிமைப்படுத்தும் பலியாகும்.
“திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார். சங்கீதம் 50:23 - உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் எவ்வளவு மனநிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள்?- நீங்கள் நிறைவாகவும், திருப்தியாகவும் உணருகிறீர்களா, அல்லது உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலாவது, குறையாக உணர்கிறீர்களா?- உங்கள் வாழ்வின் எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும், கடைசியாக எப்பொழுது தேவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்? - எப்பொழுதும் தேவனுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.- தேவனுக்கு நன்றி செலுத்துவதும், நம் சிந்தையிலும் நடத்தையிலும் அவருக்கு நன்றியுள்ளோராயிருப்பதும் அவரை மகிமைப்படுத்தும் மெய்யான பலிகளாகும்.- உங்கள் ஐசுவரியத்திலும் பணத்திலும் அவர் பிரியமாயில்லை; மாறாக, நீங்கள் அவருடைய வார்த்தைகளுக்கு நன்றியுள்ளவர்களாகவும், கீழ்ப்படிதலுடனும் இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். - அவருடைய வழியைப் பின்பற்றினால், அவர் உங்களை நித்திய இரட்சிப்பிற்குள் அழைத்துச் செல்வார். உங்களை ஆக்கினைக்கு உட்படுத்தமாட்டார்.- நீங்கள் பெற்றுக்கொண்ட எல்லா நன்மைகளையும் நினைத்து, அவற்றிற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.- இந்த நன்றியுணர்வின் செயல், தேவனுடனான உங்கள் உறவை பலப்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கையில் நேர்மையானதும், நன்றியுள்ளதுமான மனப்பான்மையை வளர்க்கவும் உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் எனது நன்றியை பலியாகச் செலுத்துகிறேன். உமது நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

