திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024 நம்பிக்கையின் இன்றைய வார்த்தை:பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்.சங்கீதம் 23:4 நீங்கள் தோல்வியடைந்து அழிந்து போவதைப் பார்க்க விரும்புபவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறீர்களா? வாழ்க்கையின் போராட்டம் ஒருபொழுதும் முடிவடையாததுபோல் உணருகிறீர்களா? தைரியமாய் இருங்கள்; நீங்கள் தனியாக இல்லை. உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் உங்களை சோர்வுறச் செய்ய வேண்டாம், ஊக்கமிழக்கச் செய்யும் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் மீட்பராகிய இயேசுவைப் பாருங்கள். அவருடைய வல்லமையைப் பாருங்கள், அவரை நம்பி சமாதானமாய் இருங்கள். தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்ந்து, அவர் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவன் உங்களுடன் இருக்கும்போது எந்தத் தீமைக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். ஏனென்றால், ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு கூர்ந்து என்னுடன்கூட இருந்து என்னை எல்லாத் தீமைகளிலிருந்தும் காப்பாற்றும். ஆமென்.
பொல்லாப்புக்குப் பயப்பட வேண்டாம்; தேவன் உங்களோடேகூட இருக்கிறார்
“திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024 நம்பிக்கையின் இன்றைய வார்த்தை:பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்.சங்கீதம் 23:4 நீங்கள் தோல்வியடைந்து அழிந்து போவதைப் பார்க்க விரும்புபவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறீர்களா? வாழ்க்கையின் போராட்டம் ஒருபொழுதும் முடிவடையாததுபோல் உணருகிறீர்களா? தைரியமாய் இருங்கள்; நீங்கள் தனியாக இல்லை. உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் உங்களை சோர்வுறச் செய்ய வேண்டாம், ஊக்கமிழக்கச் செய்யும் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டாம். உங்கள் மீட்பராகிய இயேசுவைப் பாருங்கள். அவருடைய வல்லமையைப் பாருங்கள், அவரை நம்பி சமாதானமாய் இருங்கள். தேவனைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்ந்து, அவர் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவன் உங்களுடன் இருக்கும்போது எந்தத் தீமைக்கும் நீங்கள் பயப்பட வேண்டாம். ஏனென்றால், ஒன்றும் உங்களைச் சேதப்படுத்த மாட்டாது.. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு கூர்ந்து என்னுடன்கூட இருந்து என்னை எல்லாத் தீமைகளிலிருந்தும் காப்பாற்றும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

