← செய்திகளுக்குத் திரும்பு
தேவ ஜனங்கள் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமுமானது
படத்தைப் பதிவிறக்கு

தேவ ஜனங்கள் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும்...

“ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1 இந்நாட்களில் ஒற்றுமையைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம். பிரித்தாளும் கொள்கையே சத்துருவின் வஞ்சக உத்தியாம். துரதிர்ஷ்டவசமாக, தேவ பிள்ளைகளாகிய நாமும் இந்தப் பிசாசின் சூழ்ச்சிக்குப் பலியாகிறோம். ஒருமனம் மிகவும் முக்கியமானது. இயேசுவும் கூடச் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களின் ஒற்றுமையைப் பற்றிப் பிதாவை நோக்கி ஜெபித்தார். தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவிக்க வேண்டும். பிரிவை உண்டாக்குகிற எதையும் நாம் எதிர்த்திட வேண்டும். கிறிஸ்துவின் சரீரம் ஓர் இயற்கை உடல் போன்றது. ஒவ்வொரு அவயவமும் வேறுபட்டதும் வெவ்வேறு பணியைச் செய்கிறதுமாய் இருக்கிறது. ஆனால், உடலின் உறுப்புகளெல்லாம் ஒன்றாக வேலை செய்வதால் உடல் முழுவதும் ஒரே வேலையைச் செய்கிறது. மற்றவர்களைத் தேவனின் தலைசிறந்த படைப்பாய் ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொண்டால் ஒற்றுமையாயிருப்பது எளிதாயிருக்கும். நமது அகங்காரத்தையும் சுயநலத்தையும் சிலுவையில் அறைந்தால் நாம் சமாதானமும் ஒற்றுமையும் உள்ளவர்களாய் இருக்க முடியும். சமாதானம் பண்ணுகிறவராகவும், சமாதானமுள்ள மனிதராயும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் ஓர் நல்வாழ்க்கை வாழவும், சமுதாயத்தில் சமாதனமாயும், சமாதானத்தை உருவாக்குகிறவனா(ளா)யும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1 இந்நாட்களில் ஒற்றுமையைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம். பிரித்தாளும் கொள்கையே சத்துருவின் வஞ்சக உத்தியாம். துரதிர்ஷ்டவசமாக, தேவ பிள்ளைகளாகிய நாமும் இந்தப் பிசாசின் சூழ்ச்சிக்குப் பலியாகிறோம். ஒருமனம் மிகவும் முக்கியமானது. இயேசுவும் கூடச் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு தம்முடைய சீஷர்களின் ஒற்றுமையைப் பற்றிப் பிதாவை நோக்கி ஜெபித்தார். தேவ பிள்ளைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஊக்குவிக்க வேண்டும். பிரிவை உண்டாக்குகிற எதையும் நாம் எதிர்த்திட வேண்டும். கிறிஸ்துவின் சரீரம் ஓர் இயற்கை உடல் போன்றது. ஒவ்வொரு அவயவமும் வேறுபட்டதும் வெவ்வேறு பணியைச் செய்கிறதுமாய் இருக்கிறது. ஆனால், உடலின் உறுப்புகளெல்லாம் ஒன்றாக வேலை செய்வதால் உடல் முழுவதும் ஒரே வேலையைச் செய்கிறது. மற்றவர்களைத் தேவனின் தலைசிறந்த படைப்பாய் ஏற்றுக்கொள்ள நாம் கற்றுக்கொண்டால் ஒற்றுமையாயிருப்பது எளிதாயிருக்கும். நமது அகங்காரத்தையும் சுயநலத்தையும் சிலுவையில் அறைந்தால் நாம் சமாதானமும் ஒற்றுமையும் உள்ளவர்களாய் இருக்க முடியும். சமாதானம் பண்ணுகிறவராகவும், சமாதானமுள்ள மனிதராயும் இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்முடன் ஓர் நல்வாழ்க்கை வாழவும், சமுதாயத்தில் சமாதனமாயும், சமாதானத்தை உருவாக்குகிறவனா(ளா)யும் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.