வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார். சங்கீதம் 27:10 ஆம், தேவனின் அன்பு நம் பெற்றோரை விட மேலானது. அவருடைய குமாரன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் மூலம் அவர் தமது நிபந்தனையற்ற அன்பைக் காட்டினார். தம்முடைய குமாரனைச் சிலுவையில் பலியிட்டதன் மூலம், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் நாம் அவருக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் நிரூபித்தார். அவர் என்றும் மாறாத தேவனாயிருக்கிறார். அவர் உங்களை ஒருபொழுதும் கைவிட மாட்டார். நீங்கள் அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்கள். தந்தைக்கும் தாய்க்கும் குழந்தைகள் என்போர் மிகவும் மதிப்புமிக்கவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பும் அக்கறையையும் காட்ட எந்தவொரு எல்லைக்கும் கடந்து செல்வார்கள். அவர்கள் கைவிட்டாலும், தேவன் உங்களை மறக்க மாட்டார். அவர் உங்களைத் தம் அருகில் வைத்திருப்பார். தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். அவர் உங்கள் பாதுகாப்பும் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், என்னை உம்முடைய அருகில் வைத்திருப்பதாகக் கொடுத்த உம்முடைய வார்த்தைக்கு நன்றி. உம்முடைய பாதுகாப்பையும் அரவணைப்பையும் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
நித்திய தேவன் உங்களைக் கண்காணிக்கிறார்
“வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்ளுவார். சங்கீதம் 27:10 ஆம், தேவனின் அன்பு நம் பெற்றோரை விட மேலானது. அவருடைய குமாரன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பியதன் மூலம் அவர் தமது நிபந்தனையற்ற அன்பைக் காட்டினார். தம்முடைய குமாரனைச் சிலுவையில் பலியிட்டதன் மூலம், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்றும் நாம் அவருக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதையும் நிரூபித்தார். அவர் என்றும் மாறாத தேவனாயிருக்கிறார். அவர் உங்களை ஒருபொழுதும் கைவிட மாட்டார். நீங்கள் அவருக்கு மிகவும் விலையேறப்பெற்றவர்கள். தந்தைக்கும் தாய்க்கும் குழந்தைகள் என்போர் மிகவும் மதிப்புமிக்கவர்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பும் அக்கறையையும் காட்ட எந்தவொரு எல்லைக்கும் கடந்து செல்வார்கள். அவர்கள் கைவிட்டாலும், தேவன் உங்களை மறக்க மாட்டார். அவர் உங்களைத் தம் அருகில் வைத்திருப்பார். தைரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள். அவர் உங்கள் பாதுகாப்பும் எல்லாவற்றிற்கும் எல்லாமுமாய் இருக்கிறார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், என்னை உம்முடைய அருகில் வைத்திருப்பதாகக் கொடுத்த உம்முடைய வார்த்தைக்கு நன்றி. உம்முடைய பாதுகாப்பையும் அரவணைப்பையும் அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

