← செய்திகளுக்குத் திரும்பு
வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்
படத்தைப் பதிவிறக்கு

வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்

“; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.நீதிமொழிகள் 13:11 விரைவில் செல்வந்தராகும் திட்டங்கள், விரைவானதும் கணிசமானதுமான வருவாயை உறுதியளிக்கும் வகையில், விரைவாய்ச் செல்வத்தை அடைவதற்கான மக்களின் விருப்பத்தைப் பெரும்பாலும் பொறிவைக்கின்றன. இருப்பினும், இந்தத் திட்டங்கள் பொதுவாக உண்மையான நெறிமுறைகளையும் மதிப்புகளையும் கொண்டிருக்கவில்லை. அடிக்கடி இத்தகைய திட்டங்களால் திரட்டப்படும் செல்வம், அப்பாவி மனிதர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தால் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நேர்மையான விதத்தில் விடாமுயற்சியுடன் வேலை செய்வதில் கவனம் செலுத்துவது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் மற்றவர்களின் பாராட்டையும், மரியாதையையும் பெறுவீர்கள். அதே போல் உங்களுக்குள் மனச் சமாதானத்தையும் பெறுவீர்கள். தங்கள் வேலையில் உண்மையாக இருப்பவர்களின் கைகளின் பிரயாசத்தைத் தேவன் ஆசீர்வதிக்கிறார். அப்படியே, நீங்கள் கடினமாய் உழைத்தால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். கடின உழைப்பால் ஈட்டப்படும் செல்வம் பெருகுகிறதாயும் உங்கள் தலைமுறைக்கு ஆசிர்வாதமாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விரைவில் செல்வந்தராகும் திட்டங்களைத் தவிர்க்கவும், நீர் வழங்கும் வாய்ப்புகளுடன் உண்மையாகச் செயல்படுவதில் கவனம் செலுத்தவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 12 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.நீதிமொழிகள் 13:11 விரைவில் செல்வந்தராகும் திட்டங்கள், விரைவானதும் கணிசமானதுமான வருவாயை உறுதியளிக்கும் வகையில், விரைவாய்ச் செல்வத்தை அடைவதற்கான மக்களின் விருப்பத்தைப் பெரும்பாலும் பொறிவைக்கின்றன. இருப்பினும், இந்தத் திட்டங்கள் பொதுவாக உண்மையான நெறிமுறைகளையும் மதிப்புகளையும் கொண்டிருக்கவில்லை. அடிக்கடி இத்தகைய திட்டங்களால் திரட்டப்படும் செல்வம், அப்பாவி மனிதர்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தால் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்துகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நேர்மையான விதத்தில் விடாமுயற்சியுடன் வேலை செய்வதில் கவனம் செலுத்துவது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் மற்றவர்களின் பாராட்டையும், மரியாதையையும் பெறுவீர்கள். அதே போல் உங்களுக்குள் மனச் சமாதானத்தையும் பெறுவீர்கள். தங்கள் வேலையில் உண்மையாக இருப்பவர்களின் கைகளின் பிரயாசத்தைத் தேவன் ஆசீர்வதிக்கிறார். அப்படியே, நீங்கள் கடினமாய் உழைத்தால் அவர் உங்களை ஆசீர்வதிப்பார். கடின உழைப்பால் ஈட்டப்படும் செல்வம் பெருகுகிறதாயும் உங்கள் தலைமுறைக்கு ஆசிர்வாதமாயும் இருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, விரைவில் செல்வந்தராகும் திட்டங்களைத் தவிர்க்கவும், நீர் வழங்கும் வாய்ப்புகளுடன் உண்மையாகச் செயல்படுவதில் கவனம் செலுத்தவும் எனக்கு உதவி செய்யும். ஆமென்.